KMUT கலைஞர் மகளிர் உரிமை தொகை Status check செய்வது எப்படி ( New Method ) 2023
கலைஞர் மகளிர் உரிமை திட்டம்
இந்தத் திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாள் (15- 09-2023) அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தை மகளிர்கள் அதிகமாக வரவேற்று உள்ளனர் இந்த திட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக வரும் என்று மகளிர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்சமயம் இந்த திட்டம் வெற்றிகரமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது, இந்த திட்டமானது இரண்டு ஆண்களுக்கு முன் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் வாக்குறுதிகள் அறிவித்த மிகப்பெரிய திட்டமாகும்.
இந்த திட்டம் தற்சமயம் வெற்றிகரமாக தமிழக அரசால் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது முதல் தவணையாக செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அதாவது ஒரு நாள் முன்னதாகவே 14ஆம் தேதி பயனாளிகளின் மகளிர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க தமிழக அரசு மகளிர்களுக்கு ஜூன், ஜூலை மாதத்தில் இரண்டு கட்டமாக முகாம்கள் நடத்தியது, அதாவது குறிப்பாக கிராமங்கள் மற்றும் நகரங்களில் தனித்தனியாக முகாம்கள் தன்னார்வலர்கள் மூலம் நடத்தப்பட்டது இதில் குறிப்பாக மகளிர்களுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே டோக்கன்கள் நியாய விலை கடை பணியாளர்களின் மூலம் வழங்கப்பட்டது. அந்த டோக்கன்களில் எந்த நேரத்தில் விண்ணப்பிக்க வர வேண்டும் இடத்திற்கு வரவேண்டும் என்பதை குறிப்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனை முன்னிட்டு அந்தந்த கிராமத்தில் 500 பயனாளிகளுக்கு ஒரு தன்னார்வலர்கள் என்ற வீதத்தில் முகாமில் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் செயலி மூலம் முடிவு செய்யப்பட்டு இருந்தது அதன் மூலம் மகளிர்கள் அதாவது பயனாளிகள் அந்த முகாமை பயன்படுத்தி கிட்டத்தட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் தமிழ்நாடு முழுக்க மொத்தமாக ஒரு கோடியே 65 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பித்திருந்தனர்.
அதன் பிறகு தமிழக அரசு விண்ணப்பத்தில் தெரிவித்த உறுதிமொழிக்கேற்ப அதாவது அவர்கள் தெரிவித்திருந்த தகுதிகளுக்கு ஏற்ப கிட்டத்தட்ட ஒரு கோடியே 5 லட்சம் பேருக்கு விண்ணப்பம் வெற்றிகரமாக ஏற்கப்பட்டது என்ற அறிவிப்பு வெளியானது அதன் மூலம் ஒரு ஒரு மகளை இருக்கும் பயனாளிகளுக்கும் தனித்தனியாக குறுஞ்செய்தி மூலம் அவர்கள் இந்த திட்டத்தில் அதாவது கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்ற வாக்கியத்துடன் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
அதன் பிறகு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி யார் யாரெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அவர்களது ஆதார் லிங்க் செய்யப்பட்ட வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் ரூபாய் ஆயிரம் வர வைக்கப்பட்டது அதன் மூலம் மகளிர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார் அதன் பிறகு வரவு வைக்கப்படாத இருந்த ஒரு சிலருக்கு பணம் வரவு வைக்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல் ஒரு சிலர்களுக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது அந்த குறுஞ்செய்தியும் அரசின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் ஒரு சிலருக்கு அந்த குறுஞ்செய்தி சென்று அடையாத காரணத்தினால் தமிழக அரசு இ சேவை மூலமாக ஸ்டேட்டஸ் தெரிந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பும் வெளியானது அதனை பயன்படுத்தி பயனாளிகள் தங்களுடைய ரேஷன் அட்டை என்னை வைத்து இ சேவை மூலம் ஸ்டேட்டசை செக் செய்தனர்.
இந்த வழியையும் பயன்படுத்தி ஸ்டேட்டஸ் செக் செய்ய முடியாத ஒரு சிலருக்கு மேலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் பிரத்தியேக இணையதளமான KMUT இணையதளத்திலும் விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸ் தெரிந்துகொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
அதன் மூலம் அந்தந்த பயனாளிகள் அவர்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக தங்களுடைய விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளதா அப்படியும் இல்லாமல் காத்திருப்பு பட்டியில் உள்ளதா என்ற நிலையை தெரிந்து கொள்ள பயன்படுத்தினார்கள். அதில் குறிப்பாக ஸ்டேட்டஸ் செக் செய்யும் போது உங்களுடைய ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு மேல் உள்ளது என்றும், கனரக வாகனங்கள் நான்கு சக்கர வாகனம் உங்கள் குடும்பத்தில் சொந்த பயன்பாட்டிற்கு உள்ளது என்றும், உங்க குடும்பத்தில் வருமான வரி செலுத்துபவர் உள்ளனர் என்றும் , உங்க குடும்பத்தில் விண்ணப்பித்தவர் முதியோர் உதவித்தொகை பெறுபவர் என்றும் பல்வேறு காரணத்தால் ஸ்டேட்டஸில் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் இருந்தது.
அதன் பிறகு குறிப்பாக தமிழக அரசிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியானது.
அது என்னவென்றால் நிராகரிக்கப்பட்டவர்கள் தகுதியானவர்கள் என்று கருதினால் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவர்களின் கிராமத்தில் அருகிலுள்ள இ சேவை வழியாக மேல்முறையீடு விண்ணப்பம் செய்யலாம் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது அந்த அறிவிப்பை தொடர்ந்து அதனை பயன்படுத்தி கிட்டத்தட்ட நிராகரிக்கப்பட்ட 56 லட்சம் பேர்களில் இருந்து 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையடிக்கு விண்ணப்பம் செய்து இருந்தனர்.
மேலும் மேல்முறையீடு செய்தவர்களும்
இ- சேவை வழியாக ஸ்டேட்டஸ் செக் செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கி தர உள்ளதாக தமிழக அரசிடம் இருந்து ஒரு சில தகவல்கள் வெளியாகி இருந்தது அப்படி இல்லாவிட்டால் மேல்முறையீடு செய்யும் போது கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் அவர்களுடைய மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்டுள்ளது நிராகரிக்கப்பட்டுள்ளதா என்று அனுப்பப்படும். அப்படியும் தவற விட்டால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பிரத்தியேக இணையதளமான KMUT இணையதளத்தில் நீங்கள் சுலபமாக செக் செய்ய முடியும் என்று தகவலும் வெளியாகி உள்ளது.
இதில் எது உறுதியான தகவல் என்று வரும் நாட்களில் கண்டிப்பாக தமிழக அரசின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது இதனைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவலும் வெளியாகி உள்ளது ஆதலால் நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த காலகட்டத்தை பயன்படுத்தி மேல்முறையீடு செய்வது மிகவும் நல்லது என்று கருதுகிறேன். அதனைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்தவர்களின் மனு பரிசீலனை கள ஆய்வு செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு மீண்டும் ரூபாய் ஆயிரம் அவர்களின் ஆதாரில் லிங்க் செய்யப்பட்ட வங்கி கணக்கிற்கு சென்றடைய உள்ளது.
அதன் தொடர்ச்சியாக இப்பொழுது ஆன்லைனில் புதிதாக KMUT என்ற வெப்சைட்டை உருவாக்கி அதில் உங்களது ஆதார உள்ளிட்டு OTP உங்கள் மொபைலுக்கு வந்த பின் அதை உள்ளிட்டு ஸ்டேட்டஸை ஈசியாக தெரிந்து கொள்ளலாம்.
இப்பொழுது அந்த ஸ்டேட்டஸை செக் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
Website link
மேலும் எவ்வாறு ஸ்டேட்டஸை செக் செய்ய வேண்டும் என்று காணொளி மூலம் அறிய வேண்டும் என்றால் VIJAY D TECH YOUTUBE CHANNEL காண்க
0 Comments
Thank you for your comment