முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
Muthalamaichar maruthuva kapitu thittam 2023
இந்த முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் ஏழைகள் பயன்பெறும் விதத்தில் அதாவது கட்டணமில்லாமல் உங்களுடைய உயிரைக் காக்கும் மருத்துவ செலவினை தமிழக அரசு ஏற்கனவே இதன் மூலமாக அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனையில் நீங்கள் கட்டணம் இல்லாமல் இந்த திட்டத்தில் உயர் சிகிச்சை பெற முடியும் இதற்கு நீங்கள் இந்த திட்டத்தில் அப்ளை செய்ய வேண்டும் மற்றும் அட்டையை பெற வேண்டும்
இந்த தகவலில் நீங்கள் எவ்வாறு வந்து இதழில் அப்ளை செய்வது என்றும் அட்டையை பெறுவது என்றும் தெளிவான விளக்கம் அளித்துள்ளோம் தொடர்ந்து படிக்கவும்.
இந்த முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டமானது தமிழக அரசால் 23 -01- 2009 தொடங்கப்பட்டது அதிலிருந்து இன்று வரை தொடர்ந்து செயல்பட்டு இருக்கும் மிகப்பெரிய ஒரு திட்டமாகும் இது மிகவும் எளிமையான குடும்பங்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது அதை தொடர்ந்து கிட்டத்தட்ட பல லட்சம் மற்றும் கோடிக்கணக்கான பயனாளர்கள் இதில் பயன் அடைந்துள்ளார்கள்.
இதைத்தொடர்ந்து மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்துடன் இணைந்து முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டமும் 23 - 09 - 2018 அன்றிலிருந்து ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகிறது.
இப்பொழுது இந்த திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் 1.40 கோடி பேருக்கு மேல் பயண பெற முடியும், இந்த கணக்கு கடந்த 2022 ஜனவரி வரை எடுக்கப்பட்டது.
மேலும் இந்தத் திட்டத்தில் பச்சிளம் பிறந்த குழந்தை உட்பட பல சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது இதைத்தொடர்ந்து 52 பரிசோதனை முறை மேற்கொள்ள வழிகள் செய்யப்பட்டுள்ளது எட்டு தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இது மட்டும் இல்லாமல் இந்த முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் கிட்டத்தட்ட 900-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனையும் மற்றும் 800-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளும் சிகிச்சை வழங்க இந்த திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் அனைத்து ஏழ்மையான குடும்ப மக்களுக்கு உலக தரத்தில் உயர் சிகிச்சை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் கிட்டத்தட்ட சுமார் 1.40 கோடி குடும்பங்களுக்கு மேல் பயன் பெற முடியும்.
இந்தத் திட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பயன்பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது தமிழக அரசு மேலும் இந்த திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திட்டத்தில் 1090 சிகிச்சை முறைகளும் எட்டு உயர் அறுவை சிகிச்சையும், 52 பரிசோதனை முறை மேற்கொள்ள வழிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் திட்டத்தின் பயன்கள் என்னென்ன.
இந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெற முடியும். மருத்துவ காப்பீடு பெறக்கூடிய நபர், குடும்ப அட்டையில் இருக்க வேண்டும் மற்றும் காப்பீடு அட்டைகளையும் அவர் பெயர் இருக்க வேண்டும்.
அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உயர் சிகிச்சை அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை மூலம் 5 லட்சம் வரை காப்பீடு பெற முடியும்.
இந்த திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கும் மருத்துவ பட்டியல் மற்றும் மருத்துவமனை பட்டியல் இந்த திட்டத்துடைய Official Website-ல் உள்ளது அதை நீங்கள் இந்த பார்க்கலாம் அந்த Official Website லிங்க் கீழே லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தின் பற்றி சந்தேகங்கள், விவரங்களை , குறைகளை தெரிவிப்பதற்கு மற்றும் தகவல்களை பெறுவதற்கு தனியாக உதவி மையம் தொலைபேசி எண் உடன் உள்ளது அந்த உதவி மையம் எண் - 1800 425 3993 இந்த எண்ணை தொடர்பு கொண்டு உங்களுக்கான விவரங்களை பெற முடியும்.
அடுத்து இப்பொழுது இந்த திட்டத்தை அப்ளை செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக பார்ப்போம்.
இந்த முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் நீங்கள் புதிதாக விண்ணப்பிக்க விரும்பினால் உங்களது மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் அங்கு இந்தத் திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க தனி மையம் உள்ளது அந்த மையத்தின் பெயர் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் விண்ணப்பிக்கும் மையம். அந்த மையத்திற்கு சென்று உங்களுடைய தகவல்களை கொடுத்து புதிதாக அப்ளை செய்யலாம் இதை அப்ளை செய்ய குடும்பத்தில் உள்ள அதாவது குடும்ப அட்டையில் உள்ள ஒரு நபர் மட்டும் சென்றால் போதுமானது அந்த நபர் குடும்பத் தலைவர் அல்லது தலைவியாக இருக்கலாம்.
மேலும் இந்த திட்டத்தில் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து நபர்களும் பயன்பெற முடியும் வருடத்திற்கு 5 லட்சம் வரை காப்பீடு பெற முடியும் இந்த திட்டத்தில் நீங்கள் விண்ணப்பித்த பிறகு நீங்கள் கொடுத்த ஆவணங்களை தரவுகள் மூலம் சரிபார்க்கப்படும் அதன் பிறகு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள் அந்த ஆய்வு முடிந்த பின் இந்த திட்டத்தில் பயன்பெற நீங்கள் தகுதியானவர்கள் என்று கருதினால் குறைந்தபட்சம் இரண்டிலிருந்து மூன்று வாரங்கள் கழித்து உங்களுக்கான அட்டையை நீங்கள் Official Website CMCHISTN இணையதளத்தில் டவுன்லோட் செய்ய முடியும் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நீங்கள் விண்ணப்பித்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மையத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த திட்டத்தின் நீங்கள் புதிதாக அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள் :
குடும்ப அட்டை மற்றும் குடும்ப அட்டையின் நகல்குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டை மற்றும் ஆதார் அட்டையின் நகல்
குடும்பத் தலைவரின் பெயரில் வருமானச் சான்று.
இதில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை அனைவரையும் வைத்திருப்பார்கள்.
ஆனால் வருமானச் சான்று இருக்காது அதற்கு வருமானச் சான்று நீங்கள் இ சேவை மூலமாக இணையத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் ( VAO ) கிராம நிர்வாக அலுவலரிடம் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை தெளிவாக பூர்த்தி செய்து கையெழுத்து மற்றும் முத்திரையை பெற வேண்டும்.
Application Form-ஐ டவுன்லோட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
இந்த உறுப்பினர் விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான தகவல் என்னவென்றால் இந்த திட்டத்தில் நீங்கள் பயன்பெற மற்றும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதி உங்களுடைய குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 1,20,000 /- குறைவாக இருக்க வேண்டும்.
மேலும் இந்த விண்ணப்பத்தில் குடும்பத் தலைவரின் பெயர் , தகப்பனார் பெயர் / அல்லது / கணவரின் பெயர், உங்களுடைய தொழில், குடும்ப அட்டை எண், ஆதார் அட்டை எண், உங்களுடைய நிரந்தர முகவரி, உங்களுடைய ஊர், வட்டம், மாவட்டம், தபால் குறியீட்டு எண், உங்களது கைபேசி எண், உங்க குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் விவரங்கள், பிறந்த தேதி போன்ற பல தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும் அதனை சரியாக பூர்த்தி அதனுடன் கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற வருமானச் சான்றிதழை இணைத்து அவரிடம் கையெழுப்பு மற்றும் முத்திரை பெற்று நீங்கள் விண்ணப்பிக்கும் இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க மிக மிக அவசியமான ஒன்று குடும்ப அட்டை [ Smart Ration Card ].
இந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் குடும்பத்தினர் தகுதி, அதாவது குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் பயன்பெற முடியும் மேலும் விண்ணப்பித்தவரின் சட்டபூர்வமான மனைவி , கணவன், அவர்களுடைய பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள்.
மேலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள், முக்கியமாக பயன் பெறுவோர் குடும்ப அட்டையில் அவருடைய பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும்.
மேலும் முக்கியமான தகவல் இந்த திட்டத்தில் பயன்பெற உங்களது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்தி 20 ஆயிரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் [ 1,20,000 /- ].
மேலும் இந்த திட்டத்தின் பற்றி முழு தகவல்களை அறிய மற்றும் அட்டையை டவுன்லோட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள [ VIJAY D TECH ] யூடியூப் வீடியோவை காண்க :
இந்த திட்டத்தின் அனைத்து தகவலையும் படிப்பதற்கு மிக்க நன்றி.
0 Comments
Thank you for your comment