கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பரிசீலனையில் உள்ள விண்ணப்பம் மற்றும் கள ஆய்வில் உள்ள விண்ணப்பம் என்ன செய்ய வேண்டும்
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் இந்தத் திட்டத்தில் மகளிர்க்கு பயனுள்ள வகையில் மாதம் ரூபாய் 1000 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது...
இந்தத் திட்டத்தில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன் சிறப்பு முகாம் மூலம் மகளிர் இடம் விண்ணப்பம் பெறப்பட்டது அதன் மூலம் தகுதியுடைய அனைத்து மகளிர்களுக்கும் விண்ணப்பத்தை ஏற்று அவர்களுக்கு மாதம் ரூபாய் 1000 ஆதாவது முதல் மாதம் தவணையான ஆயிரம் பணத்தை செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது...
இதன் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட இந்தத் திட்டத்தில் 55 லட்சம் பேர் மேல் நிராகரிக்கப்பட்டனர் அதில் தகுதி உடையவர்கள் என்று கருதினால் திரும்ப மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அரசால் வழங்கப்பட்டது அதன் மூலம் பயனாளிகள் அருகில் உள்ள இ சேவையில் தங்களது மேல்முறையீடு செய்யலாம் என்று அரசால் தகவல் தெரிவிக்கப்பட்டது...
இதன் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்ட பயனாளிகள் தங்களுடைய தகுதியுடைய காரணங்களை மேல்முறையினில் தெரிவித்து ஆவணங்களை சரிபார்த்து இ சேவை மூலம் தங்களது ஆவணங்களை ஆன்லைனில் பதிவு செய்து மேல்முறையீடு செய்து கொண்டு வருகிறார்கள்...
இது மட்டுமின்றி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலரால் விண்ணப்பம் மேல்முறையீடு செய்ய முடியவில்லை என்ன காரணம் என்றால் அவர்கள் ஸ்டேட்டஸ் செக் செய்யும் போது தங்களின் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது. கள ஆய்வுக்குப் பின் உரிய முடிவு எடுக்கப்படும் என்று நீண்ட நாட்களாக வருகிறது இதே ஸ்டேட்டஸை நீண்ட நாட்களாக வருவதை தொடர்ந்து அவர்களால் மேல்முறையீடு செய்ய முடியவில்லை...
இவ்வாறு மேல்முறையீடு செய்ய முடியாத பயனாளிகள் என்ன செய்ய வேண்டும் என்றால் ?
CM Helpline - கு complain செய்ய வேண்டும் அவ்வாறு complain செய்து தங்களுக்கான உரிய விவரத்தை பெற முடியும்...
CM Helpline - கு complain எப்படி செய்ய வேண்டும் என்பதை நமது VIJAY D TECH YOUTUBE CHANNEL லில் வீடியோவில் தெரிவித்துள்ளோம்...
இந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு தெரியும் நடுவில் Complain செய்யும் பொழுது Description என்ற ஒரு இடம் வந்திருக்கும் அந்த இடத்தில் என்ன டைப் செய்ய வேண்டும் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
COPY TEXT DESCRIPTION
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நான் ஏற்கனவே விண்ணப்பம் செய்திருந்தேன் எனக்கு இன்னும் பணம் வரவில்லை நான் இ சேவை சென்று ஸ்டேட்டஸ் செக் செய்தேன் எனக்கு.
காரணம் : தங்களின் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது. கள ஆய்வுக்குப் பின் உரிய முடிவு எடுக்கப்படும்.
என்று வருகிறது என்னால் மேல்முறையீடு செய்ய முடியவில்லை. மேற்படி நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு தெளிவாக விளக்கம் தரவும் மற்றும் என் விண்ணப்பத்தை அங்கீகரிக்கப்பட்டு தகுந்த முறையில் எனக்கு பணம் வரவு வைக்க வேண்டும். மேலும் இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு நான் தகுதியுடையவர் தான்... நன்றி.
இப்படிக்கு...
மேலும் இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் கள ஆய்வு சம்பந்தமாக தற்சமயம் வெளியான ஒரு சில செய்தி மற்றும் தகவல்கள் எண்ணமென்று தெளிவாக ஒன்றன்பின் ஒன்றாக பார்ப்போம் அதற்கு முன்னதாக உங்களுடைய விண்ணப்பம் கள ஆய்வில் தான் உள்ளதா என்று நீங்கள் அருகில் உள்ள இ சேவை மையத்திற்கு சென்று உங்களுடைய விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸ் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும் அதை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்களுடைய குடும்ப அட்டை அதாவது ரேஷன் அட்டை அதை கொண்டு இ சேவை மையத்திற்கு சென்றால் இ சேவை மையத்தில் இருப்பவர் தங்களுடைய குடும்ப அட்டையில் இருக்கும் 13 இலக்கு குடும்ப அட்டை எண்னை இணையதளத்தில் பதிவு செய்து தங்களுடைய விண்ணப்பத்தின் நிலை என்னவென்று தெளிவாக தெரிவிப்பார் மேலும் அதை தெரிந்து கொண்டு தங்களுடைய விண்ணப்பம் கள ஆய்வில் உள்ளதா அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்து அதன் பின் அதற்கு என்ன தீர்வு என்று காண வேண்டும், அதில் குறிப்பாக உங்களுடைய விண்ணப்பம் கள ஆய்வு மற்றும் பரிசீலனை உள்ளது என்று வந்தால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் தொடர்ந்து பின்பற்றினால் உங்களுடைய விண்ணப்பம் விரைவில் வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்படும்.
இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் கள ஆய்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது இதனை அமைச்சர் கீதாஜீவன் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார் அதாவது குறிப்பாக மேல்முறையீடு செய்தவர்களுக்கு கூடுதல் அலுவலர்களை நியமித்து இந்த கள ஆய்வு மற்றும் பரிசீலனை தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகிறது, இதன் மூலம் விரைவில் மேல்முறையீடு செய்தவர்களுக்கு கண்டிப்பாக தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரடியாக அவர்களது வீட்டிற்கு கால ஆய்வு செய்ய அதிகாரிகள் முயற்சி செய்து வருகிறார்கள் இதைத் தொடர்ந்து ஒரு சிலருக்கு தங்களது விண்ணப்பம் வருவாய் கோட்டாட்சியர் நிலையில் உள்ளது என்று குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது அதில் குறிப்பாக தெரிவிப்பது என்னவென்றால் உங்களது மேல்முறையீடு மனு கள ஆய்வு செய்ய செய்ய தங்களுடைய அலுவலகத்தில் இருந்து உங்களை தொடர்பு கொண்டால் உரிய தகவல்களை உடனடியாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அந்த குறுஞ்செய்தியில் தெளிவாக விளக்கமாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த திட்டத்தைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்டில் தெரிவிக்கலாம்
இந்த Article 📰 படித்ததற்கு மிக்க நன்றி...
0 Comments
Thank you for your comment