முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் muthalvar pen kulanthai pathukappu thittam தமிழக அரசால் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்தத் திட்டத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்தால் ரூபாய் 50,000 செலுத்தப்படுகிறது மற்றும் 2 பெண் குழந்தை இருந்தால் தனித்தனியாக ரூபாய் 25 ஆயிரம் செலுத்தப்படுகிறது... திட்டம் முடிந்தபின் மொத்தமாக ரூபாய் 3,000,00 மேல் பெறுவீர்கள்... இந்த திட்டத்திற்கு மற்றோரு பெயரும் உண்டு, அந்த பெயர் சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்.
இந்த முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது
mudhalvar pen kulanthai thittam
திட்டம் 1
ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் அந்தப் பெண் குழந்தைக்கு அரசின் மூலம எதிர்காலத்திற்கு பயன்படும் வகையில் ரூபாய் 50,000 டெபாசிட் செய்யப்படும்...
திட்டம் 2
ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தை இருக்கும் பட்சத்தில் அரசின் மூலம் அவர்களின் இருவருக்கும் எதிர்காலத்தில் உதவும் வகையில் தனித்தனியாக ரூபாய் 25 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும்...
குறிப்பு
இந்த முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் வரும் பணத்தை உடனடியாக எடுக்க முடியாது அந்தப் பெண் குழந்தை 18 வயது பூர்த்தி அடைய வேண்டும் அது மட்டும் இன்றி முக்கியமாக அந்தப் பெண் குழந்தை 12 வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் ...
அவ்வாறு இருந்தால் 18 வயதிற்கு மேல் அந்த பெண் குழந்தையின் மேல் படிப்பிற்கு அல்லது திருமண செலவிற்கு இந்த பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்...
பணம் விவரம்...
ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருப்பவர்களுக்கு இந்தத் திட்ட முடிவில் டெபாசிட் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூபாய் - 3,00,000/- வரையிலும் ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தை இருப்பவர்களுக்கு இந்தத் திட்ட முடிவில் தனி தனியாக டெபாசிட் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூபாய் - 1,50,000/- வரையிலும் பெண் குழந்தை வங்கி கணக்கில் transfer செய்யப்படும்...
இந்தத் திட்டத்தில் அப்ளை செய்ய...
தேவையான ஆவணங்கள்...
- வருமானச் சான்றிதழ்
- இருப்பிட சான்றிதழ்
- சமூகத்தின் சான்றிதழ்
- குடும்ப அட்டை (ரேஷன் கார்டு)
- ஆதார் அட்டை
- திருமண சான்றிதழ்
- ஆண் குழந்தை இல்லை என்று சான்றிதழ் தாசில்தாரிடம் வாங்க வேண்டும்
- கருத்தடை சான்றிதழ்
- பெற்றோர் வயது சான்றிதழ் (பிறப்புச் சான்று அல்லது கல்வித்துறை மாற்றுச் சான்றிதழ் )
- குடும்பத்தின் புகைப்படம்
முக்கிய விதிமுறைகள்...
இந்தத் திட்டத்தில் பயனாளியாக இருக்க வேண்டுமென்றால் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 72000-குள் குறைவாக இருத்தல் வேண்டும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் மற்றும் ஆண் குழந்தை இருக்கக் கூடாது மேலும் தாய்மார்கள் அவர்களின் பிரசவ காலம் முடிந்து தனது முதல் குழந்தை மூன்று வயதுக்குள் இந்தத் திட்டத்தில் சேர்த்து விட வேண்டும் ...
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் எங்கே விண்ணப்பிக்க வேண்டும் ?
இந்தத் திட்டத்தில் நீங்கள் அப்ளை செய்ய வேண்டுமென்றால் நீங்கள் வசித்து வரும் வட்டாரத்தில் உள்ள ( BLOCK DEVELOPMENT OFFICE ) BDO அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
BDO அலுவலகத்திற்கு சென்று பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு அப்ளை செய்ய வேண்டும் என்று கூறினால் அந்தத் திட்டத்தின் விண்ணப்ப படிவத்தை தங்களுக்கு வழங்குவார்கள் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவர்களிடம் கொடுக்க வேண்டும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய அதாவது ஆவணங்களை தயார் செய்ய கால அவகாசம் கொடுக்கப்படும் கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து BDO அலுவலகத்தில் விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும்...
அதன் பிறகு BDO அலுவலகத்தில் தங்களது ஆவணங்களை சரிபார்த்து அப்ளை செய்வார்கள் ஆவணத்தை ஸ்கேன் செய்த பின் தங்களிடம் ஒரிஜினல் ஆவணத்தை கொடுத்து விடுவார்கள். அதற்குப் பிறகு இரண்டு மாதம் கழித்து தாங்கள் இந்த திட்டத்தில் தகுதியானவர்கள் என்றால் தங்கள் பெண் குழந்தைக்கு டெபாசிட் செய்யப்பட்ட சான்றிதழ் அதாவது DOCUMENT காப்பியை தங்களிடம் கொடுப்பார்கள் அந்த DOCUMENT காப்பியை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்...
குழந்தை மைனர் என்பதால் குழந்தையின் அம்மா மற்றும் குழந்தை பெயரில் ஜாயிண்ட் அக்கவுண்டாக தொடங்கப்பட்டு பணத்தை அதில் டெபாசிட் செய்வார்கள்...
டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் பராமரித்து வருவார்கள் மேலும் இந்தத் திட்டத்தில் BDO அலுவலகத்தில் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை Renewel செய்ய வேண்டும்.
Renewel செய்ய DOCUMENT காப்பி கட்டாயம் இருக்க வேண்டும் அதனால் DOCUMENT காப்பியை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்...
அதன் பிறகு பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தி அடைந்த பின் அவரவரின் திட்டத்தின் படி பணம் வந்து சேரும் அதனை BDO அலுவலகத்தின் உறுதியின் மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்...
மேலும் இந்த திட்டத்தின் பற்றி நீங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள
VIJAY D TECH YOUTUBE ▶️ வீடியோவை காண்க ...
இந்த Article-ஐ படித்ததற்கு நன்றி ...
மேலும் தகவலுக்கு கீழே கமெண்ட் செய்யவும்...
0 Comments
Thank you for your comment