மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நவம்பருக்குள் உரிய தீர்வு
“மகளிர் உரிமைத்தொகை நவம்பருக்குள் உரிய தீர்வு”
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சட்டப்பேரவையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை பற்றி தெரிவித்த தகவல்கள்...
1. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1.62 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதி வாய்ந்த 1.06 கோடி மகளிர் தேர்வு செய்யப்பட்டனர்...
2. பெண்கள் சுயமரியாதையுடன் வாழ இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது...
3. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஒரு கோடி பேருக்கு வழங்குவதாக தெரிவித்திருந்தாலும், 1.6 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது...
4. மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர், முதியோர் உதவித்தொகை பெறுவோரும் பயன்பெறும் வகையில் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன...
5. மேலும் 2,06,000 மாற்றுத்திறனாளிகள் இந்த திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர்; திருநங்கைகளுக்கும் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது...
6. எந்தத் திட்டத்திலும் மேல்முறையீடு இருக்காது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்புள்ளது; தகுதியானவர்கள் இ-சேவை மையங்கள் மூலம் மேல்முறையீடு செய்யலாம்...
7. இப்போது மேலும் 9 லட்சம் பேர் மேல்முறையீடு செய்து இருக்கிறார்கள், அதையும் நாங்கள் பரிசீலிப்போம்; தகுதி உள்ளவர்களுக்கு நிச்சயம் தொகை வழங்கப்படும்...
8. மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காத புதிய விண்ணப்பதாரர்களுக்கு கூடிய விரைவில் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட உள்ளது அதற்கான அறிவிப்பு இனிமேல் வெளியாகும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்...
9. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்களும் புதிதாக விண்ணப்பிக்கலாம்; அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எந்த ஒரு தகுதியான பயனாளியின் வாய்ப்பும் விட்டு விடக்கூடாது என்பதில் அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது
10. இந்த மாதம் வரும் அக்டோபர் 14ம் தேதியே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் , கடந்த மாதமும் 14 ஆம் தேதியே வங்கி கணக்கில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது...
11. மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் வசதி படைத்தவர்கள், தாமாக முன்வந்து திட்டத்தில் இருந்து விலகுமாறு அமைச்சர் கீதா ஜீவன் கோரிக்கை...
12. நவம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் உரிய தீர்வு கிடைக்கும்...
மேலும் கூடுதலாக கிடைத்த தகவல்கள்
0 Comments
Thank you for your comment