பரிசீலனையில் உள்ள விண்ணப்பம்.
கள ஆய்வுக்குப் பின் முடிவு செய்யப்படும்
கள ஆய்வு பணியானது நாளையிலிருந்து சார் ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும்.
அச்சமயத்தில் அதற்கான உரிய அலுவலர்கள் நேரடியாகவோ அல்லது தங்களிடம் தொலைபேசி வழி தகவலின் மூலமாகவோ விசாரணை நடத்தி அதற்கான உத்தரவினை குறுஞ்செய்தியாக அந்தந்த பயனாளருக்கு அனுப்பி வைப்பார்கள்...
2. ஒரு தன்னார்வலர் KMUT. APP... டம்மி பதிவு செய்து அதன் பின் அன் இன்ஸ்டால் செய்யாமல் தொடர்ந்து குடும்ப அட்டையை பதிவு செய்ததால் இரண்டு முறை பதிவு என்றும் உங்கள் பதிவு சரிபார்க்கப்படும் என்றும் குறுஞ்செய்தி வரும் பட்சத்தில் அவர்களுக்கு சிறப்பு முகாம் அல்லது TNeGA அறிவிக்கும் தேதியில் மட்டுமே பதிவு செய்ய முடியும்..
3. இதுவரை இ சேவை மையம் சென்று மேல்முறையீடு பதிவு செய்யாத தன்னார்வலர்கள் உடன் பதிவு செய்ய வேண்டும்..
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....
தங்களின் கோரிக்கை மற்றும் கூறும் விபரங்கள் அனைத்தும் 60% ஒரே விதமாக உள்ளன...
இதற்க்கு பொதுவான தகவல் பதிவு செய்து விடலாம்...ஆனால் இதற்க்கு மாறாக சில விளக்கங்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியே உள்ளது....
எனவே தரவுகளில்லை, இரண்டு பதிவுகள்.
வங்கி கணக்கு மாறி இருத்தல், ஆதார் எண் தவறாக இருந்தால், வங்கி கணக்கு இதுவரை தொடங்காமல் இருத்தல் போன்றவை மற்றும் ஏற்கனவே VAO அவர்களால் கள ஆய்வு முடிக்காமல் உள்ள பயனாளருக்கு இனி புதிய முகாம் பதிவு அல்லது இது வரை பதிவே செய்யவில்லை.
என்ற என்ற கேள்விகளுக்கு
அரசு அறிவிக்கும் நாளில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதால் அறிவிப்பு வரும் வரை பொறுமை காக்கவும்...
மேலும்...
மேல் முறையீடு பணி முடிந்ததும் அரசால் புதிய பதிவுக்கு தேதி அறிவிக்கப்படும்...
கள ஆய்வானது தற்போது தான் தொடங்கப் பட்டுள்ளது ..விரைவில் மேலதிகாரி தங்களை அனுகுவார்கள்...பொறுமை அவசியம்...
இ சேவை மையம் சென்று சரிபார்ப்பது வேறு...அதில் கிடைக்கும் பதிலை அடிப்படையாக கொண்டு மேல் முறையீடு செய்வது என்பது வேறு...
எனவே இ சேவை மையம் சென்று பதிவில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை அறிந்து மேல் முறையீடு. /. அல்லது அமைதி காத்தல் செய்யவும்.....
இதனை விளக்கம் கேட்டு தங்களிடம் வரும் பயனாளரிடம் கூறலாம்...
என்று இ சேவை மையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது...
எனவே பரிசீலனை மற்றும் கள ஆய்வு உள்ள விண்ணப்பம் கள ஆய்வு சார் ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் செய்யப்பட்டு தகுதியுடைய பயனாளிகளுக்கு கட்டாயம் ரூபாய் 1000 அவர்களது வங்கிக் கணக்கிற்கு வந்து சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
ஆதலால் பணம் வராத பயனாளிகள் அனைவரும் பொறுமை காக்க வேண்டும்.
இது மட்டுமில்லாமல் இப்பொழுது இரண்டாவது தவணை வராதவர்களும் பொறுமை காக்க வேண்டும்
முக்கியமாக முதல் தவணை ரூபாய் 1000 மணி ஆர்டர் மூலம் வந்தவர்கள் இரண்டாவது தவணை மணி ஆர்டர் வர வாய்ப்புள்ளது இல்லையென்றால் நீங்கள் IPPB அக்கவுண்ட் ஓபன் செய்து இருந்தால் அந்த வங்கிக் கணக்கில் நேரடியாக வந்துவிடும்...
இல்லையென்றால் உங்களுடைய ஆதார் எந்த வங்கியில் இணைக்கப்பட்டுள்ளதோ அந்த வங்கி கணக்கில் BALANCE CHECK செய்து உங்களது பணம் வந்து உள்ளதா இல்லையா என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்...
இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பரிசீலனை மற்றும் கள ஆய்வு சம்பந்தமாக தற்சமயம் அரசு அரசு தரப்புகளில் இருந்து ஒரு சில செய்தி மற்றும் தகவல்கள் தற்சமயம் வெளியாகி உள்ளது அவைகள் என்னவென்று நீங்கள் தெளிவாக அறிந்து கொண்டால் இது தொடர்ந்து செயல்படுமா இல்லையா என்று நீங்களே தெரிந்து கொள்ளலாம் அதாவது இந்த கள ஆய்வு நடைமுறைகள்.
அதில் முதலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் கள ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்து இருந்தார் அது மட்டும் இல்லாமல் மேலும் அமைச்சர் கீதா ஜீவன் ஒரு நிகழ்ச்சியில் முக்கிய தகவல்களை தெரிவித்தார் அது என்னவென்றால் இந்த மேல்முறையீடு மனு மற்றும் நீண்ட நாட்களாக கள ஆய்வில் உள்ள மனு தொடர்ந்து பரிசீலனை மற்றும் கள ஆய்வு நடைபெற்று வருகிறது ஆதலால் மக்கள் பொறுமை காத்து அதிகாரிகளுக்கு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்து இருந்தார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சரும் அதிகாரிகளுக்கு ஒரு சில அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் , அதில் குறிப்பாக இந்த மேல்முறையீடு மனு மற்றும் கள ஆய்வில் உள்ள மனுவும் உடனடியாக 100% தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தொடர்ந்து அதற்கான செயல்பாடுகளை செய்து கொண்டு வருகிறார்கள் அதில் முதல் கட்டமாக எந்த விண்ணப்பதாரருக்கு கள ஆய்வு செய்யப்படவில்லையோ அவர்களுக்கு மொபைலில் கள ஆய்வு செய்யப்படும் என்று அதற்கு உரிய தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்றும் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
அந்தக் குறுஞ்செய்தியானது ஒரு சிலருக்கு வந்து அடைந்திருக்கலாம் ஒரு சிலருக்கு தற்சமயம் வரை வராமல் இருந்திருக்கலாம் ஒரு சிலருக்கு இதற்கு மேல் வர வாய்ப்புள்ளது, இவை அனைத்தும் நமக்கு அரசு வட்டாரங்கள் தரப்பிலிருந்து தகவல்களாக கிடைக்கப்பெற்று இருந்தன, மேலும் இதில் தெரிவித்தபடி அதிகாரிகள் கள ஆய்வு செய்து முடித்த பின் தங்களுடைய விண்ணப்பம் ஏற்கப்பட்டு விட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளதா என்று உங்களுடைய தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் அதனையும் தெரிவிக்கப்பட உள்ளனர், அதனால் அதிகாரிகள் கள ஆய்விற்காக தங்களை தொடர்பு கொள்ளும் பொழுது உரிய தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் மேலும் தங்களுடைய ஆவணங்களை சரிபார்க்க அதிகாரிகள் விருப்பம் தெரிவித்தால் அதனையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் முக்கியமாக கள ஆய்வின் போது கேட்கப்படும் கேள்வியில் முதல் கேள்வியாக தங்கள் குடும்பத்தில் ஆண்டு வருமானம் எவ்வளவு என்று அதை சரியாக தெரிவிக்க வேண்டும் இல்லையென்றால் வருமானச் சான்றிதழ் பெற்று வைத்திருந்தால் நல்லது மேலும் கனரக வாகனங்கள் சொந்த பயன்பாட்டிற்கு நான்கு சக்கர வாகனங்கள் இருக்கிறதா என்று பல்வேறு கேள்விகள் கள ஆய்வில் அதிகாரிகள் கேட்பார்கள்.
மேலும் இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் உங்களுக்கு பணம் வருவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதற்கான அனைத்து தீர்வுகளையும் நவம்பர் 30-குள் சரி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் ...
மேலும் இந்தத் திட்டத்தைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கமெண்டில் தெரிவிக்கவும்
இந்த Article-ஐ📰 படித்ததற்கு மிக்க நன்றி
1 Comments
வணக்கம் அண்ணா, உங்கள் தகவலுக்கு நன்றி. எனது விண்ணப்பம் தவரா நிராகரிக்கப் பட்டு உள்ளது. நான் வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டால், வருமானவரித்துறை சான்றிதழ் கொண்டுவரவும். டிசம்பர் மாதம் புத்திதாக புதிய விண்ணப்பம் பண்ணலாம் னு சொன்னார்கள். இது உண்மையா. தயவு செய்து உறுதி செய்யுங்கள் சகோதரரே.
ReplyDeleteThank you for your comment