கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கள ஆய்வு


 கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கள ஆய்வு


கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கள ஆய்வு


இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விண்ணப்ப படிவம் பெரும் முகாம் தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, மாவட்டம், வட்டம், கிராமம் போன்ற அனைத்து இடங்களிலும் இரண்டு கட்டமாக நடைபெற்றது அதில் கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுக்க ஒரு கோடியே 63 லட்சம் பேர் மேலாக விண்ணப்பித்திருந்தனர்... 




அதிலிருந்து தகுதியானவர்கள் என்று கருதி தமிழக அரசு ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு செப்டம்பர் 14ஆம் தேதியிலிருந்து முதல் தவணை பணம் ரூபாய் ஆயிரம் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட 53 லட்சம் பேருக்கு மேல் நிராகரிக்கப்பட்டிருந்தது அவர்கள் தகுதியானவர்கள் என்று கருதினால் மேல்முறையீடு இ சேவை மூலமாக செய்யலாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தப்பட்டிருந்தது அதன் மூலமாக இதுவரை கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்கு மேல் மேல்முறையீடு செய்துள்ளனர் ஆனால் அவர்களுக்கு SMS ( Message ) வாயிலாக தங்களது விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது பரிசீலனை செய்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று வந்தது... 





இது மட்டுமின்றி இன்னும் பல பேருக்கு ஆரம்பக்கட்டத்தில் முகாம் மூலம் அப்ளை செய்தவர்களுக்கு இ சேவையில் Status check செய்தால் பரிசீலனையில் உள்ளது கள ஆய்வுக்கு பின் உரிய முடிவு எடுக்கப்படும் என்று வருகிறது... 

இவ்வாறு பரிசீலனை மற்றும் கள ஆய்வு என்று வரும் பயனாளிகளுக்கு இந்த வாரத்தில் இருந்து கள ஆய்வு நடத்தபட்டு வருகிறது அந்த கள ஆய்வு Phone📱Call மற்றும் வீட்டிற்கு நேரடியாகவும் கேள்விகள் கேட்கப்படுகிறது...





என்னென்ன கேள்விகள் என்றால் ? 

1.உங்கள் குடும்பத்தில் மொத்தம் எத்தனை நபர் ?

2. உங்களுடைய குடும்பத்தின் ஆண்டு வருமானம் எவ்வளவு ? 

3. உங்கள் குடும்பத்தில் யாராவது அரசாங்க ஊழியர்களாக இருக்கிறார்களா ? 

4. உங்களுடைய கணவர் என்ன வேலை செய்கிறார் ? 

4. உங்கள் வீட்டின் மின் கட்டண எண் ? 

5. நீங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கு கனரக வாகனங்கள் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் இருக்கிறதா ? 

6. உங்கள் குடும்பத்தில் யாராவது வருமான வரி தாக்கல் செய்பவர் உள்ளனரா ? 






7. உங்களது வீடு சொந்த வீடு ,வாடகை வீடு. 

8. உங்களது வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா ? 

9. நீங்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்து உள்ளீர்களா ? 

10. உங்கள் குடும்பத்தில் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறுபவர்கள் யாராவது இருக்கிறார்களா ? 

11. உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஐந்து ஏக்கராவுக்கு மேல் நஞ்சை நிலம் அல்லது 10 ஏக்கராவுக்கு மேல் புஞ்சை நிலம் இருக்கிறதா ? 

12. உங்களது குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்கிறதா ? 

போன்ற பல்வேறு கேள்விகள் கள ஆய்வில் கேட்கப்படுகிறது... 





கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கள ஆய்வு




நமக்குத் தெரிந்த வரைக்கும் கள ஆய்வு நடத்தப்படும் மாவட்டங்கள்... 

விழுப்புரம் மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டம்

சென்னை மாவட்டம் 

காஞ்சிபுரம் மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம்

கடலூர் மாவட்டம் 

மதுரை மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் 

திருவாரூர் மாவட்டம்

திருச்சி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் 

கோயம்புத்தூர் மாவட்டம் 

அரியலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் 

ஈரோடு மாவட்டம்




 

போன்ற பல்வேறு மாவட்டங்களில் இந்த கள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது... 

மேலும் இதில் இல்லாத மாவட்டங்களில் கள ஆய்வு நடைபெற்றால் கமெண்டில் தெரிவிக்கவும்...

மேலும் உங்கள் மாவட்டங்களில் அல்லது கிராமங்களில் கள ஆய்வு நடைபெறுகிறதா என்று நீங்கள் அறிய உங்கள் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் ( VAO )சென்று கேட்டால் அவர்கள் தெளிவாக விளக்கம் அளிப்பார்கள்... 






அதாவது குறிப்பாக இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் தற்சமயம் கள ஆய்வு தொடர்ந்து செயல்பட்டு தான் வருகிறது  அது நகரங்கள் வாரியாகவும் கிராமங்கள் வாரியாகவும் தனித்தனியாக எவ்வாறு முகாம் மூலம் விண்ணப்பம் செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தினார்களோ அவ்வாறு இந்த கள ஆய்விற்கும் அருகிலுள்ள வருவாய்த் துறையில் பணி புரியும் பணியாளர்களின் மூலம் அரசு அதிகாரிகளின் மூலம் குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர் உதவி கிராம நிர்வாக அலுவலர் வருவாய் கோட்டாட்சியர், வருவாய் அலுவலகத்தில் பணியாற்றுபவர் போன்ற வருவாய் தொழில் துறையில் இருக்கும் அரசு அதிகாரிகள் மூலம் இந்த கள ஆய்வு ஆனது மொபைல் செயலி மூலம் நடத்தப்பட்டு வருகிறது அதில் கேட்கப்படும் கேள்விகள் என்னவென்று மேலே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது அதற்கான உரிய பதிலை தெரிவித்து உங்களது கள ஆய்வு நிறைவு செய்வோம். 


கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கள ஆய்வு






மேலும் உங்களுக்கு கூடுதல் விவரங்கள் இல்லை கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு மூலம் தெரிவிக்கலாம் அந்த மனுவை வருவாய் கோட்டாட்சியர் பரிசீலனை செய்து தங்களுக்கான பதிலை தெரிவிப்பார்... 





மேலும் ஒரு சிலருக்கு இந்த வங்கியில் உங்களது பணம் வந்து விட்டது என்று SMS ( Message ) வந்தும் ஒரு சிலருக்கு பணம் வராத இருக்கிறது அவர்கள் கட்டாயம் வருவாய் கோட்டாட்சியரிடம் அணுக வேண்டும். 

உங்களது வங்கிக் கணக்கில் பணம் வந்து உள்ளதா என்று நீங்கள் அறிய உங்களது வங்கியின் அக்கவுண்ட் பேலன்ஸ் செக் செய்யலாம் அவ்வாறு செக் செய்ய BALANCE CHECK என்ற இந்த லிங்கை கிளிக் செய்யவும்... இதில் நீங்கள் எந்த வங்கி கணக்கில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ அந்த வங்கிக் கணக்கில் பேலன்ஸ் செக் நம்பரை பயன்படுத்தி உங்களது பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து MISSED CALL செய்யவும்... 





அவ்வாறு செய்தால் உங்களது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் ( BALANCE ) உள்ளது என்று SMS ( Message ) வாயிலாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்... 

மேலும் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் உடனடி UPDATE-ஐ நீங்கள் தெரிந்துகொள்ள VIJAY D TECH என்ற YOUTUBE CHANNEL-ஐ காண்க...


இன்றைய தகவல்கள் இந்த வீடியோவில் உள்ளது கொடுக்கப்பட்டுள்ளது...




மேலும் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் கமெண்டில் தெரிவிக்கவும் உடனடியாக நாங்கள் Reply செய்வோம்... 

இந்த Article-ஐ படித்ததற்கு மிக்க நன்றி... 

மேலும் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் கமெண்டில் தெரிவிக்கவும் உடனடியாக நாங்கள் Reply செய்வோம்... 




Post a Comment

0 Comments