kalaignar magalir urimai scheme Rs.1000 | magalir urimai thogai status check online

 

Kalaignar Magalir Urimai scheme | magalir urimai thogai status check online

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் கள ஆய்வு மற்றும் பரிசீலனை உள்ள விண்ணப்பம், மேல்முறையீடு செய்த விண்ணப்பம் , 1 ரூபாய் செலுத்தப்படுகிறது... 


kalaignar magalir urimai scheme Rs.1000 | magalir urimai thogai status check online


கலைஞர் மகளிர் உரிமை திட்டம் இந்த திட்டத்திற்கு கீழே பாத்தீங்கன்னா கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன் தமிழ்நாடு முழுக்க முகாம் மூலம் விண்ணப்ப படிவம் பெறப்பட்டது. 


அதில் கிட்டத்தட்ட ஒரு கோடியே 65 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பம் செய்துள்ளனர் அதில் தகுதியானவர்கள் என்று தமிழக அரசு கருதி கிட்டத்தட்ட ஒரு கோடியே 6 லட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு ரூபாய் 1000, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திற்கான 2 தவணை DBT ( Direct Benifit Transfer ) மூலம் அவர்களின் ஆதாரில் லிங்க் செய்யப்பட்ட வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளது. 


அதன் தொடர்ச்சியாக முகாம் மூலம் அப்ளை செய்த சில பேருக்கு ஆரம்பத்தில் இருந்தே கள ஆய்வு மற்றும் பரிசீலனை நிலையில் உள்ளது என்று ஸ்டேட்டஸ் நீண்ட நாட்களாக இருந்ததுஇருந்ததுஇருந்தது. 


அதைத்தொடர்ந்து அவர்களுக்கு அதிகாரிகள் மூலம் அதாவது வருவாய்த் துறையின் , வருவாய் கோட்டாட்சியர், சார் ஆட்சியர் அவர்கள் தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது கடந்த ஒரு மாதங்களாக இந்த கள ஆய்வானது நடத்தப்பட்டு வருகிறது இந்த கள ஆய்வில் தகுதியானவர்கள் யார் என்று கருதி அதில் தகுதி உள்ளவர்களுக்கு இந்த மாதம் ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தப்பட உள்ளது. 


இப்பொழுது அந்த கள ஆய்வு 50 சதவீதம் முடிவு பெற்றுள்ளது அதனைத் தொடர்ந்து 06-11-2023 அன்றிலிருந்து பரிசீலனை மற்றும் கள ஆய்வு முடிந்தவர்களுக்கு DBT ( Direct Benifit Transfer ) மூலம் 1 ரூபாய் கிரெடிட் செய்து அவர்களின் வங்கி கணக்கு பணம் பரிவர்த்தனைய நடக்கிறதா என்று சரிபார்க்கப்பட்டு வருகிறது. 


kalaignar magalir urimai scheme Rs.1000 | magalir urimai thogai status check online


DBT ( Direct Benifit Transfer ) 

Official Website Link


மேலும் இந்த களாய்வானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது வரும் நவம்பர் 25ஆம் தேதி வரை இந்த களாய்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஒரு ரூபாய் வரும் பயனாளிகளுக்கு அடுத்த மாதம் முதல் ஆயிரம் ரூபாய் வரும் என்று கட்டாயம் தெரிகிறது.


இது மட்டும் இல்லாமல் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்டு இ சேவை மூலம் மேல்முறையீடு செய்தவர்களுக்கும் ஒரு சிலருக்கு இந்த DBT ( Direct Benifit Transfer ) மூலம் 1 ரூபாய் கிரெடிட் செய்து அவர்களின் வங்கி கணக்கு பணம் பரிவர்த்தனைய நடக்கிறதா என்று சரிபார்க்கப்பட்டு வருகிறது.


கூடுதலாக இந்த மேல்முறையீடு செய்தவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்று குறுஞ்செய்தியும் அனுப்பப்படுகிறது அவர்கள் அப்ளை செய்யும்போது கொடுக்கப்பட்ட கைபேசி எண்ணிற்கு இந்த குறுஞ்செய்தியானது அனுப்பப்படுகிறது மேலும் பணம் ரூ- 1000 எந்த வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது என்பதையும் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுகிறது. 


இந்த DBT ( Direct Benifit Transfer ) உங்கள் ஆதாரில் எந்த வங்கி உள்ளது என்று தெரிந்து கொள்ள ஆதார் உடைய இணைய வாயிலாக நீங்கள் அறிந்து கொள்ள முடியும் அதை எவ்வாறு அறிவது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். 

VIJAY D TECH


நீங்கள் இரண்டு அல்லது மூன்று அதற்கு மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருந்தாலும் உங்களுடைய ஆதாரில் எந்த வங்கி கணக்கு முதலில் லிங்க் செய்யப்பட்டதோ அதில் தான் பணம் பரிவர்த்தனை நடைபெறுகிறது இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திலும் அதே போல் உங்களுடைய ஆதாரில் லிங்க் செய்யப்பட்ட வங்கி கணக்கிற்கு தான் ரூபாய் ஆயிரம் வரவு வைக்கப்படும் அதன் மூலம் உங்களுடைய ஆதார் லிங்க் செய்யப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள அக்கவுண்ட் பேலன்ஸை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் அக்கவுண்ட் பேலன்ஸ் எப்படி தெரிந்து கொள்வது என்று தெரியவில்லை என்றால் இந்த லிங்கை கிளிக் செய்யவும். 


மேலும் இந்த கலைஞர மகளிர் உரிமை திட்டத்தில் களாய்வு முடிந்த பின் கள ஆய்வில் உள்ளவர்களுக்கு முதல் தவணை பணம் செலுத்திய பிறகு இதுவரையில் இந்தத் திட்டத்தில் அப்ளை செய்தவர்களுக்கு அடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அந்த அறிவிப்பானது டிசம்பர் மாதத்தில் வெளியாக உள்ளது என்று கருதப்படுகிறது. 


kalaignar magalir urimai scheme Rs.1000 | magalir urimai thogai status check online



இதன் மூலம் இந்த திட்டத்தில் இதுவரை ஏதோ காரணத்தினால் அப்ளை செய்யாதவர்கள் புதிதாக அப்ளை செய்ய மறு வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளது இந்த வாய்ப்பை தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளதால் அனைவரும் உங்களுடைய தகவல்கள் மற்றும் தரவுகளை முன்கூட்டியே அறிந்து இந்த திட்டத்தில் அப்ளை செய்ய வேண்டும் அதன் பற்றிய முழு விளக்கத்தை நீங்களே அறிந்து கொள்ளலாம். 


மேலும் ஒரு கூடுதலான அறிவிப்பு இந்த திட்டத்தில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை பெற்றவர்களுக்கு மூன்றாவது தவணை முன்கூட்டியே கிடைக்க நிறைய வாய்ப்பு உள்ளது அதாவது இந்த நவம்பர் மாதம் 12ஆம் தேதி தீபாவளி வருவதால் அதற்கு முன்கூட்டியே மகளிர் பயனடையும் இடத்தில் 9 அல்லது பத்தாம் தேதி உங்களுடைய வங்கி கணக்கிற்கு மூன்றாவது தவணை பணம் ரூபாய் ஆயிரம் செலுத்தப்பட உள்ளதாக அதற்கான ஆலோசனை தமிழக அரசு செய்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. 


மேலும் இந்த திட்டத்தில் மூன்றாவது தவணை பணம் வரும்போது மேல்முறையீடு செய்து காத்திருப்பவரும் மற்றும் களாய்வில் உள்ளவர்களுக்கும் பணம் செலுத்த அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது... 


மேலும் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை பற்றி முழு விவரங்கள் நீங்கள் அறிய நமது வெப்சைட்டில் இதற்கு முன் போடப்பட்டுள்ள போஸ்டை காண்க:

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் முழு விவரம்...

Post a Comment

2 Comments

Thank you for your comment