Magalir urimai thogai melmuraiyeedu | மகளிர் உரிமைத் தொகை list | வறுமைக்கோடு பாட்டியல்
நாட்டிலுள்ள மிகவும் ஏழை மற்றும் எளிமையான குடும்பத்தைச் சார்ந்தவர்களின் ஆண்டு வருமானத்தைப் பொறுத்து இந்த வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள சான்றிதழ் வழங்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்று அவர்களின் நிலைமை மற்றும் குடும்பத்தின் வீட்டின் நிலை அவர்களின் பிள்ளைகளின் கல்வி நிலைமை மேலும் அவர் குடும்பத்தில் மொத்தம் ஆண்டிற்கு ஈட்டும் வருமானத்தை பொறுத்து இந்த வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள பட்டியல்கள் அவர்களின் குடும்பம் வரும்.
உணவுக்கு தேவையான தானியங்கள் அன்றாட உணவுக்கு தேவையான பால், சர்க்கரை, பருப்பு, கோதுமை, எண்ணெய், போன்ற பொருட்கள் நாள்தோறும் வாங்க முடியாத இருப்பவர்கள் இந்த வறுமைக் கோட்டின் கீழே உள்ள பட்டியல்களில் வருவார்கள், மற்றும் சேர்க்கப்படுவார்கள் அதாவது மிகவும் ஏழ்மையான குடும்பமாகும். இதுபோல மிகவும் ஏழ்மையான குடும்பத்தினர் வறுமை கோட்டையின் கீழே உள்ள பட்டியல்களை நீங்களும் இருக்கிறீர்களா என்று அறிவது எப்படி என்ற கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்தினை தற்போது பார்ப்போம்...
அதற்கு முதலில் நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் இணையதளத்தில் Google-ல் tipps என்று டைப் செய்து search செய்யவும் , பிறகு web page-ல் முதலில் வரும் tipps.in என்ற Website-ஐ கிளிக் செய்யவும் Website Open ஆன பிறகு அதில் முதலில் tipps Abouts பற்றி தெளிவாக இருக்கும் அதை முதலில் தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும் அதன் பிறகு பச்சை நிறத்தில் கட்டமாக விரைவு BPL குடும்ப பட்டியல் என்று ஆப்ஷன் இருக்கும் அதாவது draft family BPL list அதை கிளிக் செய்யவும். அதன் பிறகு அடுத்த web page open ஆகும், அதில் முதலில் கிராமப்புறமா அல்லது நகர்புறமா என்று தேர்ந்தெடுக்க வேண்டும் குறிப்பாக Quick Filter என்ற ஆப்ஷனில் ஊரகம் ( Rural ) , நகர்ப்புறம் ( Urban ), என்னவென்று தேர்ந்தெடுத்து அதை கிளிக் செய்யவும் பிறகு உங்களது மாவட்டம் ( District ) என்னவென்று தேர்ந்தெடுக்க வேண்டும் அடுத்தது உங்களது வட்டம் ( Block ) என்னவென்று தேர்ந்தெடுக்க வேண்டும் அதன் பிறகு உங்களது கிராமம் ( Village ) என்னவென்று ஆப்ஷனில் தேர்ந்தெடுக்க வேண்டும் அதன் பிறகு Habitation Selection செய்ய வேண்டும். அடுத்தது அதை எல்லாம் சரியான ஆப்ஷன் Selection செய்து உள்ளீர்களா என்று தெளிவாக பார்த்த பிறகு கீழே scroll செய்யவும் அதில் நீல நிறத்தில் அப்ளை என்ற பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
அதில் கீழே scroll செய்தால் நீங்கள் அப்ளை செய்த கிராமத்தில் யார் யார் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளார்கள் என்று தெளிவான பட்டியல் இருக்கும் அதில் உங்களது பெயர் உள்ளதா என்று scroll செய்து செக் செய்யவும் அதில் குறிப்பாக உங்களது பெயர் உங்கள் கணவர் அல்லது தந்தை பெயர் உங்களது ஊர் உங்களது குடும்ப அட்டை tipps நம்பர் போன்ற பல்வேறு Bio-data இருக்கும் அதன் மூலம் நீங்கள் இந்த பட்டியலில் இருக்கிறீர்களா என்று தெளிவாக தெரிந்து கொள்ள முடியும், இப்படியும் உங்களது உங்களது பெயர் இந்தப் பட்டியலில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களது ரேஷன் அட்டையில் உள்ள 13 எண் இலக்கு கொண்ட குடும்ப அட்டையின் நம்பரை வைத்து Search Enter செய்து தேடவும் அவ்வாறு செய்தால் நீங்கள் இந்த வறுமை கோட்டிற்கு கீழே உள்ள பட்டியலில் இருக்கிறீர்கள் என்றால் உங்களது பெயர் மற்றும் விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள இருக்கும் இல்லை என்றால் No available என்று இருக்கும்.
இதன் மூலம் தெளிவாக நீங்கள் இந்த பட்டியலில் இருக்கிறீர்களா இல்லையா என்று எளிதாக தெரிந்து கொள்ள முடியும் இதை எதற்கு தெளிவாக தெரிவிக்கிறேன் என்றால், தற்சமயம் குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது, அதனால் இந்த பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் கண்டிப்பாக கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற முடியும் மேலும் அதிகப்படியான பெயர் கிட்டத்தட்ட 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பணம் இதுவரை வராமல் இருக்கின்றது அவர்கள் கண்டிப்பாக இந்த வறுமைக்கோட்டின் கீழே இருக்கிற பட்டியலில் இருக்கிறார்களா இல்லையா என்று கண்டறிந்து காத்திருக்க வேண்டும். அவ்வாறு வறுமை கோட்டில் கீழே இருக்கிற பட்டியலில் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ரூபாய் 1000 ஆதார் லிங்க் செய்யப்பட்ட உங்களுடைய வங்கிக் கணக்கிற்கு வந்தடையும்.
மேலும் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் உங்களுக்கு கள ஆய்வு நடத்தப்படும் பொழுது நீங்கள் இந்தப் பட்டியலில் எனது பெயர் உள்ளது என்று தெரிவித்தால் அதில் உங்களுக்கு சில சலுகைகள் கண்டிப்பாக சேர்க்கப்படும் மற்றும் இது சம்பந்தமாக நீங்கள் உங்களிடம் மொபைல் மூலமாகவோ அல்லது வீட்டிற்கு நேரடியாகவோ ஆய்வு செய்ய வரும் வருவாய் துறை அதிகாரிகளிடம் அல்லது வருவாய்த் துறையில் பணிபுரியும் அதிகாரிகளிடம் தெளிவாக தெரிவிக்கலாம் அதன் மூலம் உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ள தகவலாக அமையும்.
இதைத் தொடர்ந்து உங்கள் விண்ணப்பத்தை கள ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தங்களை நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது அதனால் தங்களுடைய விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும் அதில் குறிப்பாக அரசிடம் இருந்து இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் குறுஞ்செய்திகள் அனுப்ப நிறைய வாய்ப்புள்ளது.
இதன் மூலம் உங்களது விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது அதாவது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் உங்களது விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்று எளிதாக தெரிந்து கொள்ள முடியும், அதன் பிறகு நிராகரிக்கப்பட்டுள்ளதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்களா என்று குறுஞ்செய்தி மூலம் தெரிந்து கொண்ட பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை நீங்கள் செய்ய முடியும் இது குறிப்பாக மேல்முறையீடு செய்தவர்களுக்கும் நீண்ட நாட்களாக கள ஆய்வில் இருப்பவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ள பதிவாக இருக்கும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு கண்டிப்பாக இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திலிருந்து ரூபாய் ஆயிரம் வரும் என்று நம்பிக்கையுடன் இருங்கள். இதைத்தொடர்ந்து இந்த திட்டத்தில் புதிய விண்ணப்பமும் விரைவில் அரசின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தயாராக உள்ளது இன்று அரசு வட்டாரங்கள் தரப்பிலிருந்து நமக்கு தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது அதனால் இதற்கு முன் இரண்டு கட்ட முகாம் மூலம் விண்ணப்பிக்க தவறியவர்கள் பயன்பெற முடியும்.
0 Comments
Thank you for your comment