Pradhan mantri awas yojana Scheme 2024 - 2025 | how to apply modi house scheme in tamilnadu

 

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டம் ( Pradhan mantri awas yojana Scheme ) 


Pradhan mantri awas yojana Scheme 2024 - 2025 | how to apply modi house scheme in tamilnadu



[ PMAY ] இந்த திட்டமானது மத்திய அரசால் கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது அதன் தேதி 25/06/2015 தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட மானிய தொகை வழங்குவதாகும் இதில் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியவர்கள் பயன்பெற முடியும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தை நான்கு வகையாக பிரித்து மானிய தொகை வழங்கப்படுகிறது.


Note 2024 Budget Update

இந்த திட்டம் நீண்ட நாட்களாக செயல்பட்டு வருகிறது தற்சமயம் அதாவது 2024 பட்ஜெட்டில் இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டம் [ PMAY ] பற்றி பெரிய தகவல் கிடைத்துள்ளது என்னவென்றால் மீண்டும் இந்தத் திட்டம் தொடர்ச்சியாக செயல்பட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படவுள்ளது இதை 2024 பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்...

இதனை பயன்படுத்தி வீடு இல்லாதவர்கள் தற்சமயம் விண்ணப்பித்து இலவச வீட்டை பெற முடியும்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் ( PMAY) திட்டத்தில் யார் யாரெல்லாம் தகுதியானவர்கள் என்று அறிவது...


தொடர்ந்து பின்வரும் நான்கு வகையான இவர்கள் இந்த திட்டத்தில்  தகுதி உள்ளவர்கள்...

1. [ EWS ]
2. [ LIS ]
3. [ MIG 1 ]
4. [ MIG 2 ]

1. முதலில் பொருளாதாரத்தில் மிகவும் பன்தங்கியவர்கள், இவர்களின் பிரிவு [ EWS ] - ரூபாய் (ரூ). 3 லட்சம் அல்லது அதற்கு குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்கள் இதில் முதல் கட்டத்தில் வருவார்கள் அதாவது
மூன்று லட்சம் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்கள்...


2. இரண்டாவதாக குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள், இவர்களின் பிரிவு [ LIS ] -
இவர்களுக்கு ஆண்டு வருமானம் 3 லட்சத்திலிருந்து 6 லட்சத்திற்குள் வருமானம் ஈட்டுபவர்கள் இந்த பிரிவில் வருவார்கள்.


3. மூன்றாவதாக நடுத்தர வருமான வகையை சார்ந்தவர்கள் அல்லது ஈட்டுபவர்கள், இவர்களின் பிரிவு [ MIG 1] - இவர்களுக்கு ஆண்டு வருமானம் 6 லட்சத்திலிருந்து 12 லட்சத்திற்குள் இருப்பவர்கள் வருமானம் ஈட்டுபவர்கள் இதில் இந்த பிரிவில் வருவார்கள்.


4. நான்காவதாக நடுத்தர வருமான வகையை சார்ந்தவர்கள் இரண்டாவது பிரிவு, இவர்களின் பிரிவு [ MIG 2 ] - 12 லட்சத்திலிருந்து 18 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் ஈடுபவர்கள் இந்த பிரிவில் வருவார்கள்...


PMAY OFFICIAL WEBSITE LINK


இந்த நான்கு வகையான பிரிவுகளில் வரும் சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற முடியும்.
மேலும் குடிசை வீடு ஓட்டு வீடு இயற்கை சூழலால் பாதிக்கப்பட்ட வீடுகள் வீடு இல்லாதவர்கள் இந்த திட்டத்தில் தகுதி உடையவர்கள் ஆவார் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் இந்த திட்டத்தில்.


இந்த பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் ( PMAY ) திட்டத்தில் தகுதியற்றவர்கள் யார் யார் என்றால்...
சொந்தமாக அவர்களின் பெயரில் வீடு வைத்திருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியற்றவர் ஆவார் அது மட்டுமில்லாமல் வேறு ஏதேனும் மாநிலம் அல்லது மத்திய அரசின் மூலம் பசுமை வீடு இலவச வீடு திட்டத்திற்கு விண்ணப்பித்து பெற்று இருந்தால் அல்லது விண்ணப்பித்து வைத்திருந்தால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது மேலும் 18 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈடுபவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது  மேலும் வீடு கட்ட சொந்த நிலம் இல்லாதவர்கள் இதில் விண்ணப்பிக்க முடியாது...

இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன ?

  • ஆதார் அட்டை [ AADHAAR CARD ]
  • குடும்ப அட்டை [ SMART RATION CARD ]
  • வங்கி விவரம் வங்கி புத்தகம் [ BANK PASS BOOK ]
  • முகவரி சான்றிதழ் [ NATIVE CERTIFICATE ]
  • வருமானச் சான்றிதழ் [ INCOME CERTIFICATE ]
  • வீடு கட்ட சொந்த இடம் அதன் பத்திரத்தின் நகல் பட்டாவின் நகல் [ DOCUMENT COPY, PATTA COPY ]

இந்தத் திட்டத்தில் பெரும்பான்மையானவர்கள் [ EWS ] பிரிவில் அதிகபட்ச மானியமாக 2,67,000 பெற முடியும்...


இந்தத் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்...

முதலில் ஆன்லைனில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான  வாய்ப்பு இருந்தது தற்சமயம் அதற்கான வாய்ப்பு இல்லாததால் உங்களது ஊரில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சென்று அலுவலகத்தில் உள்ளவர்களிடம் தாங்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தில் விண்ணப்பிக்க உள்ளோம் அதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்கள் என்னென்ன என்று கேளுங்கள் அவர்கள் அதற்கு தெளிவான விவரங்களை தெரிவித்து உங்களிடமிருந்து தேவையான ஆவணங்களை பெற்றுக்கொண்டு அதை சரி பார்த்து BDO office [ BLOCK DEVELOPMENT OFFICE ] வட்டார வளர்ச்சி அலுவலகம் அனுப்பி வைப்பார்கள் அதன்பிறகு அதன் பிறகு உங்களுடைய விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது நீங்கள் அதற்கு தகுதி உடையவர் என்றால் அவர்கள் கள ஆய்வு நடத்தி உங்களுக்கு வீட்டின் Sanction Order அனுப்பி வைப்பார்கள்...


அதன் பிறகு நீங்கள் நான்கு தவணையாக உங்களுடைய மானிய தொகையை உங்களுடைய வங்கிக் கணக்கிற்கு பெற முடியும் ஒரு ஒரு கட்டமாக நான்கு முறையாக உங்களுடைய பணம் அதாவது மானியம் உங்களுடைய வங்கிக் கணக்கு வந்து அடையும்...

மேலும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டம் ( PMAY ) Pradhan mantri awas yojana  இணையதளத்தின் மூலம் உங்களுடைய வீடு கட்டுவதற்கான Sanction Order- ஐ டவுன்லோட் செய்து பெற முடியும் மற்றும் அதில் உங்களுடைய ஸ்டேட்டஸை தெரிந்து கொள்ள முடியும். 


மேலும் இனிமேல் இந்த திட்டத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு மீண்டும் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன...

Post a Comment

0 Comments