கலைஞர் மகளிர் உரிமை திட்டம்...புதிய குடும்ப அட்டைக்கு புதிய விண்ணப்பம் விரைவில்...
தமிழக அரசின் நிதி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களால் இந்த மாதம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது அதில் குறிப்பாக இந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்காக 2024 - 2025 நிதியாண்டிற்கு ரூபாய் - 13720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலம் இந்த நிதியாண்டில் எத்தனை பேருக்கு இந்த தொகை சென்றடைய உள்ளது என்று தெளிவாக இப்பொழுது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் மொத்தமாக 2.25 கோடி மேல் குடும்ப அட்டை உள்ளது அதில் கிட்டத்தட்ட பாதிப்பேருக்குத்தான் பேருக்கு தான் இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூபாய் - 1000 தற்சமயம் சென்றடைகிறது, சென்ற வருடம் 2024 செப்டம்பர் மாதத்தில் இந்த திட்டமானது காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் அன்று (15 -Sep-2023) தொடங்கி வைக்கப்பட்டது. அந்த நாளிலிருந்து தமிழக அரசின் மூலம் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் ஆதாரில் லிங்க் செய்யப்பட்ட வங்கி கணக்கிருக்கு மாதம் ரூபாய்-1000 ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறது.
இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயனாளிகளாக இணைவதற்கு தமிழ்நாடு அரசால் விண்ணப்பிக்க நடத்தப்பட்ட முகாம் மூலம் விண்ணப்பித்தவர்கள் கிட்டத்தட்ட ஒரு கோடியே 63 லட்சத்திற்கு மேல் இருப்பார்கள், அதில் குறிப்பாக ஒரு கோடியே 6 லட்சத்து ஐம்பதாயிரம் விண்ணப்பங்கள் முதல் முறை தேர்ந்தெடுக்கப்பட்டது. இது மட்டுமில்லாமல் கூடுதலாக 53 லட்சத்திற்கு மேல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருந்தன அதில் தகுதியானவர்கள் இ சேவை மூலம் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டிருந்தது அதன் மூலம் கிட்டத்தட்ட 11 லட்சத்தி 85 ஆயிரம் பேருக்கு மேல் மேல்முறையீடு செய்திருந்தனர் அதில் ஒரு சிலருக்கு இரண்டாம் கட்டமாக பயனாளிகளாக இணைக்கப்பட்டது அதன் மூலம் இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டம் பயனாளிகளின் எண்ணிக்கை கூடுதலாக கடந்த ஜனவரி மாதம் அதிகரித்தது.
Kalaignar Magalir Urimai eligibility
தற்போது இந்த நிலையில் ஒரு கோடியே 8 லட்சம் பேருக்கு மேல் ரூபாய் ஆயிரம் மாதம் வாங்கிக் கொண்டிருப்பார்கள் என்று தெரிய வருகிறது. மேலும் இந்த ஆண்டில் இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு குறைவாக உள்ளதாக தெரிகிறது ஆனால் கணிசமான அளவிற்கு பயனடைய எண்ணிக்கை புதிய விண்ணப்பத்தின் மூலம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு தமிழக அரசின் மூலம் இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக 13720 கோடி 2024-2025 நிதி ஆண்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்ட இந்த தொகை ரூபாய் 13,720 கோடியை வைத்து 2024-2025 நிதியாண்டில் வருகின்ற 12 மாதங்களுக்கு சுமார் ஒரு கோடியே 14 லட்சத்தி 33,000 பேருக்கு மேல் இந்தத் திட்டத்தின் மூலம் மாதம் ரூபாய் 1000 வழங்க முடியும். எனவே தற்சமயம் பயன்பெற்று வரும் பயனாளிகளில் எண்ணிக்கையை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது குறிப்பாக இதற்கு முன் தெரிவித்தது போல் இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகளாக தற்சமயம் ஒரு கோடியே 8 லட்சம் பேருக்கு மேல் பயன் பெற்று வருகிறார்கள் பட்ஜெட் தாக்கல் மூலம் அதில் வெளியிட்ட நிதியின் மூலம் இந்த திட்டத்தில் சுமார் ஒரு கோடியே 14 லட்சத்து 50 ஆயிரம் என்ற எண்ணிக்கைக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. Chick here இதனை அதிகாரப்பூர்வமாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்த நேரத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த ஆண்டு 2025ல் சுமார் 7 லட்சத்திற்கும் மேல் புதிய விண்ணப்பத்தின் மூலம் புதிதாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, விரைவில் 7 லட்சம் பேருக்கு மேல் பயன்பெற முடியும் என்பதால் புதிய விண்ணப்பத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது அது முக்கியமாக மார்ச் மாதம் வர அதிக வாய்ப்பு உள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை பொறுத்து பார்த்தால் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் முதல் புதிய விண்ணப்பதாரர்களை உடனடியாக இணைத்து செயல்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது வாய்ப்புள்ளது பயனாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும் இந்த புதிய விண்ணப்பத்தை பொறுத்தளவில் விண்ணப்பிக்க உள்ளவர்கள் புதிதாக குடும்ப அட்டை விண்ணப்பித்தவர்களாக இருக்கக்கூடும் கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக புதிய குடும்ப அட்டை தமிழக அரசின் மூலம் வழங்கப்படாமல் இருந்து வருகிறது அதனால் மார்ச் மாதத்திற்குள் புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டு அதில் இந்த விண்ணப்பிக்க தகுதியானவர்களுக்கு இந்த வாய்ப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அரசு வட்டாரங்கள் தரப்பிலிருந்து நமக்கு தகவல் மூலம் தெரிய வருகிறது அதிகாரிகளும் புதிய ரேஷன் கார்டை விரைவில் விண்ணப்பதாரருக்கு வழங்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது, அப்படி புதிதாக விண்ணப்பித்த குடும்ப அட்டை வந்து விட்டால் அடுத்த கட்டமாக வரும் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விண்ணப்ப முகாமின் மூலம் புதிய குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்புகள் வழங்கப்படும்.
0 Comments
Thank you for your comment