கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் புதிய செய்திகள்
மகளிர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கி வரும் மிகப்பெரிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் அடுத்த அறிவிப்பு வந்துவிட்டது, திராவிட முன்னேற்ற கழகம் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்குறுதிகள் அளித்திருந்தனர் அதன் முக்கியமான வாக்குறுதியாக இந்த மகளிர் உரிமை திட்டம் மிகவும் கவனத்தை ஈர்த்தது அதனை சென்ற வருடம் 2023 செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டு இதில் பயனாளிகளாக இணைந்துள்ள ஒவ்வொரு மகளிர்களுக்கும் அவர்களின் ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு ரூபாய் 1000 வரவைக்கப்படுகிறது.
இந்த செயல்பாடானது மாதம் தோறும் 15 ஆம் தேதி தொடர்ந்து தமிழக அரசின் மூலம் பணம் செயல்படுத்தப்பட்டு வருகிறது அதில் குறிப்பாக தமிழ்நாடு முழுக்க நகரங்கள் மற்றும் கிராமங்களில் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒரு கோடியே 8 லட்சத்தி ஐம்பதாயிரம் பேருக்கு மேல் தற்சமயம் பயனாளிகளாக இணைந்து தொடர்ந்து இந்த மாதம் ரூபாய் 1000 அவர்களின் மயில் கணக்கில் வாங்கிக் கொண்டு வருகிறார்கள். தற்சமயம் லோக்சபா தேர்தலை முன்னிட்டு இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரிவுபடுத்த மிகவும் அதிக வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அதனை தொடர்ந்து இந்த 2024-25 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருந்தார் அதில் இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு ரூபாய் 13,720 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து கண்டிப்பாக இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டம் புதிய விண்ணப்பம் மற்றும் விரிவுபடுத்த வாய்ப்பு அதிகம் உள்ளது என்று தெரிய வருகிறது.
குறிப்பாக இந்த லோக்சபா தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிகள் பேச்சுவார்த்தையில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது அதனைத் தொடர்ந்து எதிரணியிலும் பல்வேறு கூட்டணியில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டு வருகிறது அதில் திமுகவினர் பெரிய அளவில் இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கைகொடுக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்து வருகிறார்கள் முதலமைச்சரும் அதே நம்பிக்கையுடன் இருந்து வருகிறார்வருகிறார்.
கடந்த 2023 செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டமானது மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்த ரூபாய் ஆயிரம் ஆனது பொருளாதார ரீதியாக மகளிர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக கூறப்படுகிறது ஆரம்ப காலகட்டத்தில் இந்த திட்டம் தொடங்கப்படும் காலத்தில் ஒரு கோடி பயனாளிகள் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது ஆனால் அதனை தொடர்ந்து விண்ணப்பங்கள் முகாம் மூலம் பெறப்படும் பொழுது அதிகமாக தகுதி உடையவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் இதில் மேலும் 8 லட்சத்தி ஐம்பதாயிரம் பேர் பயனாளிகளாக இணைக்கப்பட்டு தற்சமயம் ஒரு கோடியே 8 லட்சத்தி ஐம்பதாயிரம் பேருக்கு மேல் பயணிகளாக இணைந்து பயன்பெற்று வருகிறார்கள்.
தற்சமயம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இந்த திட்டத்தின் மூலம் இலங்கை மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 105 குடும்பங்களில் 19487 பெண்கள் பயனாளிகளாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது அதனை தமிழக அரசும் தெளிவாக தெரிவிக்கப்பட்டு இருந்தது, இது மட்டும் இல்லாமல் இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கி இருப்பதால் புதிய விண்ணப்பம் கட்டாயம் வரும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் அதே போல் இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் அட்டை வராமல் இருந்து வந்தது அப்படி புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக புதிய ரேஷன் அட்டையை வழங்கி அவர்கள் தகுதி உடையவர்கள் என்றால் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த லோக்சபா தேர்தலை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொகை உயர்த்தப்படுமா என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டு வருகிறார்கள் ஆனால் தமிழக அரசு தரப்பிலிருந்து தற்சமயம் தொகையை உயர்த்த வாய்ப்பு மிகவும் குறைவு தொகையை உயர்த்த எண்ணம் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது, தற்போது தமிழ்நாடு அரசுக்கு நிதி நெருக்கடி இருப்பதால் அது சாத்தியம் இல்லை ஒன்று. ஒருவேளை இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் தொகை உயர்த்துவது சம்மதமாக வாக்குறுதிகள் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்பார்க்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது. அதனால் விரைவில் புதிய விண்ணப்பம் வர அதிக வாய்ப்புள்ளது
0 Comments
Thank you for your comment