kalaignar kanavu illam | இலவச வீடு வழங்கும் திட்டம் 2024 | kalaignar kanavu illam scheme | kalaignar kanavu illam apply | கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2024 | கலைஞர் வீடு வழங்கும் திட்டம்
kalaignar kanavu illam scheme 2024 :
தமிழ்நாட்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் 2024 - 2025-ல் ஒரு வீட்டிற்கு தலா ரூபாய் - 3.5 லட்சம் என்ற அளவிற்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் வீடுகள் இந்தத் திட்டத்தின் கீழ் கட்ட ரூபாய் 3,100 கோடி தமிழக அரசால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளனர்.
இப்பொழுது இந்த திட்டத்தை பற்றி அதாவது கலைஞர் கனவு இல்ல திட்டத்தை பற்றி முழு விளக்கத்தையும் தெளிவாக பார்ப்போம்...
கலைஞர் கனவு இல்லம் திட்டம்
தமிழ்நாடு அரசு இந்த நிதியாண்டின் பட்ஜெட் தாக்கல் செய்யும் பொழுது கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் ₹ 3,100 கோடி நிதி ஒதுக்க உள்ளது மேலும் இந்தத் திட்டத்திற்கான அனைத்து முழு வழிகாட்டு நெறிமுறைகளையும் அப்போதே வெளியிட்டு இருந்தது. சென்ற பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ( 19-02-2024 ) சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை பற்றி அதை தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார்.
தமிழ்நாட்டில் குடிசை இல்லாத வீடுகளாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழகத்தில் குடிசை வீடுகளிலும் ஓட்டு வீடுகளிலும் வசிப்பவர்களுக்கு ஏழ்மையான குடும்பத்தில் இருப்பவர்களுக்கு புதிதாக கான்கிரீட் வீடுகள் அதாவது RCC.கூரையுடன் கூடிய வீடுகள் காங்கிரட் ஆக கட்டித்தர இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
மேலும் இந்த அறிவிப்பினை தொடர்ந்து கடந்த அதாவது சென்ற மார்ச் மாதம் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் இதற்கான அரசாணை வெளியிட்டது.
இதில் முக்கியமாக இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களின் பயனாளிகளின் தகுதிகள் உள்ளிட்ட அனைத்து & ஒட்டுமொத்த விவரங்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் செயல்படுத்துவதற்கான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பி.பொன்னையா வெளியிட்டார் அதன் பிறகு பல்வேறு விதமான அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கி உள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீடும் 360 சதுர அடி என்ற பரப்பளவில் கட்டாயம் இருக்க வேண்டும். இதைத்தொடர்ந்து இந்த திட்டத்திற்கான அனைத்து வழிகாட்டுதல் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் வீடுகள் அனைத்தும் 360 சதுர அடி என்ற அளவில் சமையல் அறையுடன் கட்டாயம் இருக்க வேண்டும். அதில் முக்கியமாக 300 சதுர அடி ஆர் சி சி கூடையுடன் காங்கிரட் ஆகவும் மீதம் இருக்கும் 60 சதுரஅடி தீ பற்றாத பொருட்களின் மூலம் கூறையாக ஒவ்வொரு பயனாளிகளும் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிற்க்கான தொகை அனைத்தும் சேர்த்து ரூபாய் 3.50 லட்சம் ஆக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டப்படும் வீட்டின் சுவர்கள் அனைத்தும் செங்கல், ஏசிசி பிளாக், மற்றும் இன்டர் லாக் சிஸ்டம் கொண்ட பொருட்களால் மட்டுமே கட்டாயம் கட்டியிருக்க வேண்டும்.
மேலும் முக்கியமாக கட்டப்படும் வீட்டின் சுவர்கள் மண்ணால் கட்டப்பட்டு இருக்க கூடாது. வீடு கட்டுவதற்கான செலவினை குறைக்க பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் கட்டுமானங்களை விரைவாக கட்டி முடிக்க பயன்படுத்தும் தொழில்நுட்ப உபகரணங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் அதற்கான அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பயனாளிகளை தேர்வு செய்பவர்கள் யார் யார் என்றால் அதாவது இந்த திட்டத்தில் தகுதியான பயனாளிகள் மட்டுமே இணைக்க வேண்டும் என்று அரசின் முக்கிய நோக்கம் அதாவது ஏழ்மை குடும்பத்தை சார்ந்தவர்கள், வீடு இல்லாதவர்கள், குடிசை வீட்டில் இருப்பவர்கள், ஓட்டு வீட்டில் இருப்பவர்கள் மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னவென்றால்...
- Land Document xerox ( பத்திரம் நகல் )
- Ration Card ( ரேஷன் அட்டை )
- Patta &Chitta Copy ( பட்டா & சிட்டா )
- Aadhaar Card ( ஆதார் அட்டை )
- Phone or Mobile number) தொலைபேசி நம்பர்
- Passport Size ( அளவு புகைப்படம் )
- Bank Passbook ( வங்கி கணக்கு விவரம் )
- Income certificate ( வருமானச் சான்றிதழ் )
- Address details ( முழு முகவரி )
இதில் முக்கியமாக பயனளிகளை தேர்வு செய்வதற்கு அந்தந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் அந்த கிராமத்தின் ஊராட்சி உதவி பொறியாளர்கள், வட்டார பொறியாளர் வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மேற்பார்வையாளர் ஆகியோர்கள் அடங்கிய குழுக்கள் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள குழு அனைத்தும் கிராமத்தில் இருக்கும் அனைத்து குடிசை வீடுகளில் ஓட்டு வீடுகளில் இருப்பவர்களை ஆய்வு செய்து தகுதியின் அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பாக மத்திய அரசின் திட்டமான பிரதமரின் வீடு கட்டும் திட்டம் அதாவது பிரதமரின் ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் கிராமத்தின் ஊராட்சியில் 25 முதல் 50 வீடுகள் கட்டாமல் நிலுவையில் இருந்தால் கட்டாயம் அந்த ஊராட்சிக்கு இந்த நிதி ஆண்டிற்கான 2024-2025 கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் ஒதுக்கப்படாது மற்றும் ஒதுக்கீடு செய்யப்படும் பட்டியலில் சேர்க்கப்படாது. இதேபோல் எந்தெந்த ஊராட்சியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் ஊராட்சி வீடுகள் திட்டத்தின் கீழ் பழுது பார்ப்பதற்கு பட்டியலில் எடுக்கப்பட்டு இருந்தால் அந்த கிராமத்திலும் அந்த ஊராட்சிகளிலும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியதில்லை.
மேலும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து அடிப்படையில் கலைஞரின் கனவு இல்லம் வீடுகள் தொடர்பான ஒதுக்கீடு சம்பந்தமான விவரங்கள் வட்டம் மற்றும் கிராமத்தின் ஊராட்சியின் அடிப்படையில் தயாரித்து ஊரக வளர்ச்சி இயக்குனரும் இடம் அனுப்பி வைக்க வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த பட்டியலில் முன்னுரிமை கொடுப்பவர்களுக்கு list ஆன்லைனில் தெரிந்து கொள்வதற்கு www.tipps.in என்ற இணையதளத்தை பயன்படுத்த வேண்டும்.
0 Comments
Thank you for your comment