kalaignar magalir urimai scheme in tamil | KMUT Scheme | கலைஞர் உரிமைத் தொகை திட்டம்


கலைஞர் மகளிர் உரிமை திட்டம் பற்றி முழு விவரம்

kalaignar magalir urimai scheme in tamil | கலைஞர் உரிமைத் தொகை திட்டம்

Kalaignar Magalir urimai scheme ( KMUT ) 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் kalaignar magalir urimai scheme கீழ் தமிழ்நாடு முழுக்க கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் முகாம் மூலம் 1.63 கோடி விண்ணப்பங்களைப் பெறப்பட்டது, அதில் தகுதி வாய்ந்தவர்கள் எனக் கருதி தமிழகத்தில் உள்ள 1.06 கோடி பெண்களுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்குகிறது. இந்தத் திட்டத்தை KMUT Scheme செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார் இதன் பிறகு மாதத்திற்கான DBT ( Direct Benifit transfer ) மூலம் மற்றும் ஆதாரில் லிங்க் செய்யப்பட்ட வங்கி கணக்கை சரிபார்க்கப்பட்டு பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் ரூ. 1,000 டெபாசிட் செய்யப்படுகிறது மற்றும் இந்தத் திட்டம் பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டுகளையும் வழங்குகிறது.


மேலும் இந்த திட்டத்தில் விண்ணப்பித்த 1.63 கோடி விண்ணப்பகளில் 53 லட்சம் பேருக்கு மேல் நிராகரிக்கப்பட்டு இருந்தனர் அதில் அவர்கள் தகுதி வாய்ந்தவர்கள் என்று கருதினால் அவர்களுடைய ஆவணத்துடன் இ சேவை மையங்களில் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டு இருந்தது இதன் மூலம் 11,85,000 பேர் இதுவரையில் மேல்முறையீடு செய்துள்ளனர் மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முடிவடைந்தது இதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக தெரிவித்து இருந்தார்...

மேலும் இந்தத் திட்டத்தில் இரண்டாவது மாதத்திற்கான தவணை அக்டோபர் மாதம் 14ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது... 


இதைத் தொடர்ந்து தமிழக அரசால், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், துணை ஆணையர் தலைமையில் கள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த கள ஆய்வானது முகாம் மூலம் விண்ணப்பித்து STATUS CHECK செய்யும் போது பரிசீலனை மற்றும் கள ஆய்வில் உள்ளது என்று வந்தவர்களுக்கும் மேலும் இ சேவை மூலம் மேல்முறையீடு செய்தவர்களுக்கும் நடத்தப்பட்டு வருகிறது...

இந்த கள ஆய்வின் முடிவுகள் 15 நாட்களுக்குள் பயனாளிகளின் Mobile எண்ணிற்கு SMS வாயிலாக தெரிவிக்க வேண்டும் என்று அரசால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது... 


மேலும் இந்தத் திட்டத்தில் இதுவரை அப்ளை செய்தவர்களுக்கு மீண்டும் முகம் மூலம் அல்லது இ-சேவை மூலம் விண்ணப்பிப்பதற்காக வாய்ப்பை தமிழக அரசால் உருவாக்கி தரப்படும், மற்றும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்...


kalaignar magalir urimai scheme in tamil | கலைஞர் உரிமைத் தொகை திட்டம்





இந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்க உள்ள புதிய பயனாளிகளின் தகுதி நெறிமுறைகள்...

• இந்தத் திட்டத்தில் விவிண்ணப்பிக்க உள்ளவர் மகளிராக மட்டுமே இருக்க வேண்டும், ஆண்கள் விண்ணப்பிக்க முடியாது

• பயனாளிகளின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 2,50,000 குறைவாக இருக்க வேண்டும்.

• விண்ணப்பிக்க உள்ள பயனாளிகளின் வயது 21 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். 

• விண்ணப்பிக்க உள்ள பயனாளி குடும்ப தலைவராக இருத்தல் வேண்டும். 

• பயனாளிகள் அரசால் எந்த ஒரு திட்டத்திலும் ஓய்வூதியம் பெறாதவர்களாக இருக்க வேண்டும். 

• குடும்பத்தின் மின் பயன்பாடு அவசியம் ஆண்டிற்கு 3600 யூனிட்டுக்கு குறைவாக இருக்க வேண்டும். 

• மேலும் நிலம் வைத்து இருப்பவர்கள் என்றால், நஞ்சை நிலமாக இருந்தால் ஐந்து ஏக்கராவுக்கு குறைவாக இருத்தல் வேண்டும். 

• புஞ்சை நிலமாக இருந்தால் பத்து ஏக்கராவுக்கு குறைவாக இருத்தல் வேண்டும்.

• பயனாளிகள் தமிழ்நாட்டின் நிரந்தரமான குடிமக்களாக இருக்க வேண்டும். 

• பயனாளிகளின் குடும்பத்தில் சொந்த பயன்பாட்டிற்காக கனரக வாகனங்கள் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது

• குடும்பத்தில் முதியோர் உதவித்தொகை, ஓய்வூதியம், ( OAP ) பெறுபவர் யாரும் இருக்கக்கூடாது அப்படி இருந்தால் வேறு ஒருவரின் பெயரில் விண்ணப்பிக்கலாம்.

• குடும்பத்தில் GST செலுத்தும் தொழில் செய்பவர் தொழில் நிறுவனம் வைத்துள்ளவர் ஆண்டிற்கு 50 லட்சம் மேல் Annual turnover செய்பவர் இருக்க கூடாது... 


விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்.. 

∆  குடும்ப அட்டை ( Ration card ) 

∆  வங்கி புத்தகம் ( Bank Passbook ) அல்லது வங்கி கணக்கு விவரம். 

∆  கைபேசி எண் ( Mobile Number )

∆  ஆதார் அட்டை ( Aadhaar card )

∆  வருமானச் சான்று ( Income certificate ) ஆனால் கட்டாயம் இல்லை.

∆  இருப்பிடச் சான்று ( Native certificate ) ஆனால் கட்டாயம் இல்லை.

∆  மின் கட்டண ரசீது ( Tneb Bill )

இந்தத் திட்டத்தில் ஸ்டேட்டஸ் செக் செய்வது எப்படி ?

முறை 1

இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் Official website KMUT - ஐ Open செய்து Home Page- ல் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிய... என்று Option இருக்கும் அதை Chick செய்து அதன் பிறகு பொதுமக்கள் உள்நுழைவு என்ற Option இருக்கும் அதை Chick செய்து  உங்கள் ஆதார் அட்டை எண்ணை உள்ளிடவும் பிறகு கிழே OTP அனுப்பவும் என்ற Option-ஐ chick செய்யவும்... பிறகு உங்கள் ஆதாரில் லிங்க் செய்யப்பட்ட மொபைல் மொபைல் எண்ணிற்கு OTP வரும்  அந்த OTP-ஐ உள்ளிடவும் அடுத்த அதில் இருக்கும் கேப்ட்சாவை பார்த்து அதனையும் உள்ளிடவும் பின் கடைசியாக சரிபார்க்க என்ற button-ஐ Chick செய்யவும்.. பின்பு உங்களுடைய Status அதில் தெரியும்... 

முறை 2

உங்கள் அருகில் உள்ள இ சேவை மையத்தில் சென்று உங்களுடைய ரேஷன் கார்டு நம்பரை கொடுக்கவும் அங்கே அவர்கள் இ சேவை Website-ல் உங்களது ரேஷன் நம்பரை என்டர் செய்து  அதாவது KMUT Status check e sevai option- ல் உங்களுடைய ரேஷன் நம்பரை என்டர் செய்து உங்களின் ஸ்டேட்டஸை என்ன இருக்கிறது என்று அவர்கள் தெரிவிப்பார்கள் இல்லையென்றால் Printout கூடம் நீங்கள் எடுத்து பார்த்துக் கொள்ளலாம்... 


இந்த இரண்டு முறை மட்டுமே இப்பொழுதைக்கு நடைமுறையில் உள்ளது இந்த இரண்டு முறையில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய ஸ்டேட்டஸை செக் செய்து கொள்ளலாம் அவ்வாறு முதல் முறை ஒரு சில நேரத்தில் Website server issues இருக்கலாம் அதனால் நீங்கள் இரண்டாவது முறை இ சேவை மூலம் தெரிந்து கொள்ளலாம்...  


மேலும் விவரங்களுக்கு VIJAY D TECH YOUTUBE வீடியோவை காண்க... 


இந்த Article-ஐ 📰 படித்ததற்கு நன்றி... 

Post a Comment

0 Comments