Kalaignar Magalir Urimai thogai latest news | Magalir urimai thittam latest news in tamil
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் இன்று முதல் நிராகரிக்கப்பட்டு இ சேவை மூலம் மேல்முறையீடு செய்தவர்களுக்கும் அதுமட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக முகாம் மூலம் அப்ளை செய்துவிட்டு பரிசீலணை மற்றும் கள ஆய்வு உள்ளவர்களுக்கும் இன்று முதல்
( 09-11-2023 ) ரூபாய் ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் கிரெடிட் செய்யப்படுகிறது...
இப்பொழுது அதைப் பற்றி முழு தகவலையும் ஒன்றன்பின் ஒன்றாக பார்ப்போம்...
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்., இந்தத் திட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் முகாம் மூலம் தமிழ்நாடு முழுக்க கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டது. அதில் கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுக்க ஒரு கோடியே 65 லட்சம் பேருக்கு மேல் அப்ளை செய்திருந்தனர் அதில் தமிழக அரசு சில வழிமுறையின் மூலம் தகுதி வாய்ந்தவர்கள் என்று கருதி, அதில் ஒரு கோடியே 6 லட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
இது மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 56 லட்சம் பேருக்கு மேல் நிராகரிக்கப்பட்டிருந்தனர் அதில் இந்த திட்டத்தில் அவர்கள் தகுதி வாய்ந்தவர்கள் கருதினால் இணைய வழியில் இ சேவை மூலமாக மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதன் மூலம் கடந்த ஒரு மாதங்களாக கிட்டத்தட்ட 11 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு மேல் மேல்முறையீடு செய்துள்ளனர் .,
அந்த மேல்முறையீடு செய்தவர்களுக்கும் அது மட்டும் இல்லாமல் நீண்ட நாட்களாக கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக முகாம் மூலம் அப்ளை செய்து ஸ்டேட்டஸ் செக் செய்யும் போது பரிசீலனை மற்றும் கள ஆய்வு என்று வந்தவர்களுக்கும் இன்று முதல் ( 09-11-2023 ) பணம் ரூபாய் ஆயிரம் அவர்களது வங்கி கணக்குக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.
இது அவர்கள் ஆதாரில் லிங்க் செய்யப்பட்ட வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது முக்கியமாக DBT [ Direct Benifit Transfer ] டிரான்ஸ்பர் மூலம் அனுப்பப்படுகிறது...
முக்கியமாக ( 09-11-2023 ) இன்று ஒரு நாள் முன்னதாகவே பணம் கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் கிடைத்த தகவலின்படி நாளை
( 10-11-2023 ) முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இரண்டாம் கட்டமாக இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார் அதில் மேல்முறையீடு செய்த பல்வேறு பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டு மற்றும் வங்கியின் வரவு வைக்கப்பட்ட புத்தகம் கொடுக்கப்படுகிறது.
இதன் மூலம் இந்தத் திட்டத்தில் கிட்டத்தட்ட ஏழு லட்சத்திற்கு மேல் பயனாளிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதாவது முன்கூட்டியே நிராகரிக்கப்பட்டு மேல்முறையீடு செய்யப்பட்டவர்கள் அனைவரும் கூடுதலாக பரிசீலனை மற்றும் கள ஆய்வு ,இந்தப் பணமானது வரவைக்கப்படுகிறது.
இந்த தகவலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களை சந்திக்கும் போது தெரிவித்தார் அதாவது கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேலும் 7 லட்சம் பயனாளிகள் பயனடைய உள்ளனர் என்று தெரிவித்தார்.
இதன் மூலம் மேல்முறையீடு செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு அவர்களுடைய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் நீங்கள் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்..., என்று தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
மேலும் ஒரு ரூபாய் 1 ரூபாய் testing payment அனுப்பப்பட்டு அதன் மூலம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு பண பரிமாற்றம் நடக்கிறதா என்று தெரிந்து கொண்டு அதன் பிறகு தமிழக அரசு மேல்முறையீடு செய்து தகுதியானவர்களுக்கு ரூபாய் 1000 அவர்களுடைய ஆதாரில் லிங்க் செய்யப்பட்ட வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்படுகிறது...
இதன் மூலம் மேல்முறையீடு செய்த பயனாளிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர் மேலும் பரிசீலனை மற்றும் கள ஆய்வில் உள்ளவர்களுக்கும் பணம் அவர்களுடைய ஆதாரில் லிங்க் செய்யப்பட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுகிறது.
KMUT OFFICE WEBSITE
CLICK HERE
இதற்குமேல் இன்னும் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தும் அல்லது பரிசீலனை மற்றும் கள ஆய்வில் உள்ளவர்களும் பணம் வரவில்லை என்றால் அவர்களுக்கு தனியாக ஒரு SMS அனுப்பப்படுகிறது . அந்த SMS-ல் நீங்கள் பதிவு செய்யப்பட்ட மேல்முறையீடு விண்ணப்பம் எங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் மூலம் உங்களுடைய விண்ணப்பம் வருவாய் கோட்டாட்சியரிடம் விசாரணையில் உள்ளது.
மேலும் இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து உங்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டால் உங்களுடைய தகவல்களை தெளிவாக தெரிவிக்கவும் மேலும் அவர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்தை தரும்படி அந்த குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது இது மட்டுமில்லாமல் இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் உங்களுடைய விண்ணப்பம் கள ஆய்வு நடத்தப்பட்டு உங்களுடைய விண்ணப்பத்தில் நிலையை உங்களுக்கு SMS ஆக அனுப்பப்படும்.
அதில் நீங்கள் இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்களா இல்லையா என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும் அதன் மூலம் நீங்கள் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்றால் உங்களுடைய ஆதாரில் லிங்க் செய்யப்பட்ட வங்கிக் கணக்கிற்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் முதல் தவணை நீங்கள் பெற முடியும் இந்த முடிவு அனைத்தும் நவம்பர் மாதம் இறுதிக்குள் நடைபெறும் என்று தமிழக அரசு தெளிவாக தெரிவித்துள்ளது.
முக்கியமாக நவம்பர் 25-க்கு மேல் உங்களுடைய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக உங்களுடைய விண்ணப்பத்தில் நிலையை அனுப்பப்படும் என்று தமிழக அரசு ஒரு ஒரு வாரத்துக்கு முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மேல்முறையீடு , பரிசீலனை மற்றும் கள ஆய்வில் உள்ளவர்களுக்கு இந்த திட்டத்தில் பணம் வருவதில் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் வீடியோவை காண்க : VIJAY D TECH YOUTUBE CHANNEL..
இந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நீங்கள் புதிதாக அப்ளை செய்ய வேண்டும் என்றால் வரும் டிசம்பர் வரை காத்திருக்கவும் டிசம்பருக்கு மேல் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தமிழக அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி சட்டப்பேரவையில் ஏற்கனவே தெரிவித்துள்ளார் அதன்படி கட்டாயம் புதிய பதிவுக்கு அதாவது புதிய விண்ணப்பத்திற்கு அறிவிப்பானது விரைவில் வெளியாகும் என்று மக்கள் தரப்பிலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது அதன்படி கண்டிப்பாக புதிய விண்ணப்பத்திற்கு அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் நீங்கள் புதிதாக அப்ளை செய்ய வேண்டும் என்றால் முன்கூட்டியே உங்களுடைய ஆவணங்களை தயார் படுத்தி வைக்க வேண்டும் அந்த ஆவணங்கள் எண்ண வேண்டும் என்றால் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, குடும்ப அட்டை , வருமானச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் நீங்கள் முன்கூட்டியே தயார் படுத்தி வைத்திருக்க வேண்டும் மேலும் அதைப் பற்றி அறிய அதாவது புதிய விண்ணப்பத்தின் பற்றிய அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
CLICK HERE 👇
இந்த திட்டத்தில் மேல்முறையீடு செய்ய தவற விட்டவர்களுக்கு இனிமேல் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அப்படி வழங்கப்பட்டால் உடனடியாக நமது youtube சேனலில் தெரிவிப்போம்
VIJAY D TECH நீங்கள் அங்கே உடனடியாக தெரிந்து கொள்ளலாம் இது மட்டுமில்லாமல்.
மேலும் புதிய விண்ணப்பத்திற்கான அறிவிப்பு வந்தவுடன் உடனடியாக அதன் தேதி மற்றும் அதன் விவரங்களை நம்மளுடைய இணைய வழியில் தெரிவிப்போம். மேலும் இந்த திட்டத்தைப் பற்றி ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே கமெண்டில் தெரிவிக்கவும் உடனடியாக உங்களுடைய கருத்திற்கு நாங்கள் திரும்ப கமெண்ட் செய்வோம்.
இந்த Article- ஐ 📰 படித்ததற்கு மிக்க நன்றி.
0 Comments
Thank you for your comment