கலைஞர் கனவு இல்லை வீடு திட்டம் 2024 | free house scheme in tamilnadu | tamilnadu free house apply online.


 கலைஞர் கனவு இல்லை வீடு திட்டம் 2024 | free house scheme in tamilnadu | tamilnadu free house apply online


கலைஞர் கனவு இல்லை வீடு திட்டம் 2024 | free house scheme in tamilnadu

கலைஞர் கனவு இல்லம் இந்த திட்டம் பொறுத்த அளவில் தமிழ்நாட்டின் இலவச வீடு வழங்கும் திட்டம் என்றும் சொல்லலாம் வரும் காலகட்டத்தில் குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கு. தமிழ்நாட்டின் ஏழை எளிய மக்களின் குடிசை வீட்டை கான்கிரீட் வீடாக மாற்ற இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது இந்த திட்டத்தில் இந்த ஆண்டு 2024 இல் ஒரு லட்சம் வீடு கட்டப்பட உள்ளதாக தமிழக அரசு தற்சமயம் வெளியிட்ட பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது. 2024-2025 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருந்தார் அதில் மிக முக்கியமான திட்டமான இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை தெரிவித்து இருந்தார் அதில் ஊரகப்பகுதியில் வரும் 2030க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடு தமிழக அரசின் மூலம் கட்டித் தரப்படும் என்று தெரிவித்திருந்தார் அதற்கு ஒரு வீடு கட்டுவதற்காக மூன்று லட்சத்து 50 ஆயிரம் தமிழக அரசே நிதி வழங்குகிறது. 



கலைஞர் கனவு இல்லம் தெளிவான விளக்கம். 


இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முதல் கட்டமாக இந்த ஆண்டு ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் ஊரகப்பகுதியில் கட்டித் தரப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது, அந்த வீடு கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு தலா மூன்று லட்சத்து 50 ஆயிரம் பணத்தை தமிழக அரசே ஒட்டுமொத்தமாக வழங்குகிறது. 


முக்கியமாக கிராமப் பகுதியில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் அதிக முன்னுரிமை வழங்கப்பட உள்ளது அவர்களுக்கு கான்கிரீட் வீட்டை கட்டித் தர இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது, மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் வரும் 2030க்குள் குடிசை இல்லாத தமிழகமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதன் மூலம் வரும் ஆறு ஆண்டு 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030 இதற்குள் 8 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


மேலும் இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ஏழை எளிய மக்களுக்கு நிலம் இல்லாவிட்டால் வீடு கட்டுவதற்கான நிலம் அரசு வழங்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைய அதிக வாய்ப்பு உள்ளது முக்கியமாக ஏழை எளிய மக்கள் நிலம் இல்லாத மக்கள் வீடு கட்டுவதற்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


கலைஞர் கனவு இல்லை வீடு திட்டம் 2024 | free house scheme in tamilnadu


இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் உங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று இதனைப் பற்றி தெளிவாக அறிய முடியும் மேலும் இந்த திட்டத்தின் தொடக்க நிலைகளை தற்சமயம் மேற்கொண்டு வருவதால் வரும் காலங்களில் இது திட்டம் மிகவும் விரைவாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது, அந்த அறிவிப்பினை தமிழக அரசு விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது மேலும் நீங்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க கண்டிப்பாக உங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வரும் காலகட்டத்தில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பிக்க முடியும் மேலும் இந்த திட்டத்தில் 



விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னவென்றால்... 


1. குடும்ப அட்டை (Ration Card)ரேஷன் கார்டு 

2. ஆதார் அட்டை (Aadhaar Card) ஆதார் கார்டு

3. கைபேசி எண் (Mobile Number) மொபைல் நம்பர்

4. பாஸ்போர்ட் ( Passport Size )அளவு புகைப்படம். 

5. ஜாதி சான்றிதழ் (Community Certificate) 

6. வருமானச் சான்றிதழ் (Income certificate) 

7. மின்னஞ்சல் முகவரி. 


மேலும் இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுவோரின் பட்டியலை நீங்கள் ஆன்லைனில் தெரிந்து கொள்ள முடியும் அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தின் லிங்கை கிளிக் செய்யவும் அதில் உங்களுடைய ரேஷன் கார்டு 13 இலக்கு என்னை உள்ளிட்டு நீங்கள் அந்த பட்டியலில் இருக்கிறீர்களா என்று தெரிந்து கொள்ள முடியும் அவ்வாறு உங்கள் பெயர் இருந்தால் இந்த திட்டத்திற்கு நீங்கள் விண்ணப்பித்தால் உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 


Website Link 

Tipps list


மேலும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க மற்றொரு வாய்ப்பாக இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பை உருவாக்கி தரவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கின்றனர் அதன் மூலம் கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டத்தில் இணையதளத்தில் நீங்கள் விண்ணப்பிக்க முடியும் அதில் விண்ணப்பிக்க முதலில் அந்த இணையதளத்தை Open செய்து Apply Online ஆன்லைன் என்ற பட்டனை கிளிக் செய்யவும் அதன் பிறகு அதில் கேட்கப்படும் Basic Data உங்களுடைய பெயர் முகவரி மொபைல் நம்பர் போன்றவற்றை Enter செய்து அதன் பிறகு மேலும் சில தகவல்களை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Submit என்ற பட்டனை கிளிக் செய்யவும் இவ்வாறு செய்த பிறகு உங்களுடைய விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ உங்களுக்கு தெரிவிக்கப்படும், இது விரைவில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இவ்வாறு இணையதளம் விரைவில் வெளியிட்டால் நமது இணையதளம் www.tninfo360.com மூலமாகவும் அதனை கண்டிப்பாக தெரிவிப்போம். 


மேலும் இந்தத் திட்டத்தில் ஏழை எளிய மக்கள் விண்ணப்பிக்க தயாராக இருந்தால் அதற்கு முதல் கட்டமாக நீங்கள் முதல்வர் உதவி மையம் CM HELPLINE- க்கு மனு மூலம் தெரிவிக்கலாம் அந்த மனுவில் நாங்கள் குடிசை வீட்டில் வசிப்பவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்று அதன் போல் தகவல்களை உள்ளிட்டு நீங்கள் மனுவாக எழுதி அனுப்ப முடியும். முதல்வர் உதவி மையம் இணையதளத்தின் லிங்கை கீழே கொடுத்துள்ளோம். 


Website Link

CM HELPLINE


மேலும் இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை பற்றி தெளிவாக நீங்கள் அறிய VIJAY D TECH யூடியூப் சேனலில் உள்ள வீடியோவை காண்க. 

Post a Comment

0 Comments